திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2651 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2651பெரிய திருவந்தாதி || 67
அநுவோநன் றென்றங் கமருலகோ வேண்டில்* அதுவோர் பொருளில்லை யன்றே? *- அதுவொழிந்து மண்ணின்றாள் வேனெனிலுங் கூடும் மடநெஞ்சே! * கண்ணன்தாள் வாழ்த்துவதே கல்.
பதவுரை Show / Hide
மடநெஞ்சே, Madanenjee - அறிவுகெட்ட மனமே!
அதுவோ நன்று என்று, Adhuvo Nandru Endru - (இப்பூபதியிலிருப்பைவிட) அந்தப் பரமபதாநுபவம் சிறந்ததென்று கொண்டு
அங்கு அவர் உலகு வேண்டில், Angu Avar Ulaku Vendl - அந்தப் பரம பதாநுபவத்தை விரும்புகிற பக்ஷத்தில்
மண் நின்று ஆள்வேன் எனினும், Man Nindru Aalvaen Eninum - இந்த மண்ணுலகத்தில் நிலை நின்று ஐச்வரியத்தை ஆள வேணுமென்று விரும்பினாயாகிலும்
கூடும், Koodum - அதையும் அவன் எளிதில் அருளக்கூடும்;
அது ஓர் பொருள் இல்லை அன்றே, Adhu Oor Porul Illai Andrae - அதனைக் கொடுப்பது (எம்பெருமானுக்கு) அஸாத்யமான காரியமல்லவே;
அது ஒழிந்து, Adhu Ozhindhu - அந்தப் பரமபதாநுபவத்தை உபேக்ஷித்து விட்டு
கண்ணன், Kannan - ஆசவிப்படி உபய விபூதியையும் அளிக்க வல்லவனான எம்பெருமானுடைய
தாள், Thaal - திருவடிகளை
வாழ்த்துவதே, Vaazhthuvathe - மங்களாசாஸநம் பண்ணுவதையே
கல், Kal - அப்பஸிக்கக்கடவாய்.