திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2654 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2654பெரிய திருவந்தாதி || 70
அடர்ப்பொன் முடியானை யாயிரம்பே ரானை, சுடர்கொள் சுடராழி யானை,-இடர்கடியும் மாதா பிதுவாக வைத்தேன் எனதுள்ளே யாதாகில் யாதே இனி?
பதவுரை Show / Hide
அடர்பொன் முடியானை, Adarpon Mudiyaanai - அடர்ந்த பொன்மயமான திருவபிஷேகத்தையுடையவனும்
ஆயிரம் பேரானை, Aayiram Peraanai - ஸஹஸ்ரநாமங்களால் பிரதிபாதிக்கப்படுபவனும்
சுடர்கொள் சுடர் ஆர்யானை, Sudarkol Sudar Aaryanai - (சந்திர ஸூர்யன் முதலியன) சுடர்களையெல்லாம் வென்று விளங்குகின்ற திருவாழியையுடையவனுமான எம்பெருமானை.
இடர் கடியும் மாதா பிது ஆக, Idar Kadiyum Maatha Pithu Aaga - துக்கங்களைப் போக்கவல்லதாயும் தந்தையுமாக
எனது உள்ளே வைத்தேன், Enathu Ullae Vaiththen - என்னுடைய ஹ்ருதயத்திலே இருத்தினேன்;
இனி, Ini - இனிமேல்
யாது ஆகில் யாதே, Yaadhu Aagil Yaadhe - (எனக்கு) என்ன நேர்ந்தாலென்ன?