திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2656 | பெரிய திருவந்தாதி || 72 | முதலாம் திருவுருவம் மூன்றென்பர், ஒன்றே
முதலாகும் மூன்றுக்கும் மென்பர் – முதல்வா,
நிகரிலகு காருருவா! நின்னகத்த தன்றே,
புகரிலகு தாமரையின் பூ. | பதவுரை Show / Hideமுதல்வா, Muthalvaa - ஸகலகாரண பூதனான பெருமானே! மூன்று திரு உருவம் முதல் ஆம் என்பர், Moondru Thiru Uruvam Mudhal Aam Enbar - பிரமன் விஷ்ணு சிவன் என்கிற மூன்று திவ்ய மூர்த்திகள் தலைவராவர்’ என்று சிலர் சொல்லுவார்கள்; மூன்றுக்கும் ஒன்றே முதல் ஆகும் என்பர், Moondrukkum Ondrae Mudhal Aagum Enbar - ‘மேற்சொன்ன மூன்று மூர்த்திகளுக்கும் வேறொரு தத்துவம் தலையாயிருக்கும்’ என்று மற்றுஞ் சிலர் சொல்லுவார்கள். நிகர் இலகு கார் உருவா, Nikar Ilaku Kaar Uruvaa - மேகமொன்று சொல்லலாம்படி அதனோடொத்து விளங்காநின்ற திருமேனியை யுடையவனே! புகர் இலகு தாமரையின் பூ, Pugar Ilaku Thaamaraik Koo - தேஜஸ்ஸுமிக்கு விளங்குகின்ற தாமரைப் பூவானது நின் அகத்தது அன்றே, Nin Agaththathu Andrae - உன்னிடத்திலுள்ளதன்றோ? (திருநாபிக்கமலமே உனது பரத்வத்தை வெளியிடவல்லது என்றவாறு.) |