திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2660 | பெரிய திருவந்தாதி || 76 | உள்ளிலும் உள்ளந் தடிக்கும் வினைப்படலம்,
விள்ள விழித்துன்னை மெய்யுற்றால்,-உள்ள
உலகளவு யானும் உளனாவன் என்கொல்?
உலகளந்த மூர்த்தி! உரை. | பதவுரை Show / Hideஉலகு அளந்த மூர்த்தி, Ulaku Alandha Moorthi - த்ரிவிக்ரம பகவானே, உன்னை உள்ளிலும், Unnai Ullilum - உன்னை(நெஞ்சில்) அநுஸந்தித்த மாத்திரத்திலும் உள்ளம், Ullam - எனது நெஞ்சானது துடிக்கும், Thudikkum - (ஸந்தோஷத்தினால்) பூரிக்கின்றது வினை படலம் விள்ள, Vinai Padalam Vill - பாவங்களின் கூட்டங்கள் என்னை விட்டு ஒழிந்து போம்படி விழித்து, Vizhithu - உன்னாலே நான் கடாக்ஷிக்கப் பெற்று உன்னை மெய்வற்றால், Unnai Meivatraal - (பரமபதத்திலே வந்து) உன்னை உள்ளபடியே அடைந்து விட்டேனாகில் உள்ள உலகு அளவும், Ulla Ulaku Alavum - நீ வியாபித்திருக்கிற உலகமெங்கும் யானும் உளன் ஆவன், Yaanum Ulan Aavan - நானும் வியாபித்தவனாவேன்; என் கொலோ, En Kolon - நான் சொல்லுகிற விது ஸம்பாவிதநதானோ? உரை, Urai - நீயே சொல்லு. |