திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2664 | பெரிய திருவந்தாதி || 80 | பிறப்பிறப்பு மூப்புப் பிணிதுறந்து, பின்னும்
இறக்கவும் இன்புடைத்தா மேலும்,-மறப்பெல்லாம்
ஏதமே யென்றல்லால் எண்ணுவனே, மண்ணளந்தான்
பாதமே யேத்தாப் பகல். | பதவுரை Show / Hideபிறப்பு, Pirappu - பிறவியையும் இறப்பு, Irappu - மரணத்தையும் மூப்பு, Mooppu - கிழத்தனத்தையும் பிணி, Pini - வியாதிகளையும் துறந்து, Thurandhu - ஒழிந்து பின்னும், Pinnum - அவ்வளவோடு மல்லாமல் இறக்கவும், Irakkavum - மிகவும் இன்பு உடைத்து ஆம் ஏலும், Inbu Udaithu Aam Aelum - ஆநந்தமுடையதான ஸநவல்யமோக்ஷம் உண்டாவதானாலும் மண் அளந்தான் பாதமே ஏத்தா பகல், Man Alandhaan Paathame Aetthaa Pakal - உலகளந்த பெருமானுடைய திருவடிகளை வாழ்த்தப்பெறாத காலங்களிலுண்டான மறப்பு எல்லாம், Marappu Ellam - மறப்புகள் எல்லாம் ஏதமே என்று அல்லால் எண்ணுவனே, Edhame Endru Allal Ennavane - துன்பமென்றே எண்ணுவனேயொழிய வேறுவகையாக எண்ணுவனோ? |