திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2665 | பெரிய திருவந்தாதி || 81 | பகலிரா என்பதுவும் பாவியாது, எம்மை
இகல்செய் திருபொழுதும் ஆள்வர்,–தகவாத்
தொழும்பர் இவர், சீர்க்கும் துணையிலர் என்றோரார்,
செழும்பரவை மேயார் தெரிந்து. | பதவுரை Show / Hideசெழு பரவை மேயார், Sezhu Paravai Meyaar - அழகிய திருப்பாற் கடலிலே பொருந்திக் கண் வளர்ந்தருளும் பெருமான், இவர் தகவாதொழும்பர், Ivar Thagavathozhumbar - “இவ்வாழ்வார் நம்முடைய அருளுக்குப் பாத்திரமாகக் கூடாத நீசர்; சீர்க்கும் துணை இலர், Seerkum Thunai Ilar - சீர்மை பொருந்திய துணையை உடையவருமல்லர்” என்று தெரிந்து ஓரார், Endru Therinthu Ooraar - என்பதை ஊன்றி ஆராயாதவனாய் பகல் இரா என்பதுவும் பாவியாது இருபொழுதும், Pagal Ira Enbadhum Paaviyadhu Irupozhudhum - பகற்போது இராப்போது வாசியின்றியே எப்போதும் இகல் செய்து, Ikal Seidhu - வலிகட்டாயப்படுத்தி எம்மை ஆள்வர், Emmai Aalvar - அடியேனை அநுபவியா நின்றான். |