திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2669 | பெரிய திருவந்தாதி || 85 | தங்கா முயற்றியவாய்த் தாழ்விசும்பின் மீதுபாய்ந்து,
எங்கேபுக் கெத்தவம்செய் திட்டனகொல்,-பொங்கோதத்
தண்ணம்பால் வேலைவாய்க் கண்வளரும், என்னுடைய
கண்ணன்பால் நன்னிறங்கொள் கார். | பதவுரை Show / Hideபொங்கு ஓதம், Pongu Oodham - கிளர்ந்த அலைகளையுடைத்தாய் தண் அம், Than Am - குளிர்ந்து அழகிய பால்வேலைவாய், Paalvelaivai - திருப்பாற்கடலிலே நல் நிறம் கொள் கார், Nal Niram Kol Kaar - நல்ல திருமேனி நிறத்தைக் கொள்ளை கொண்டிருக்கிற மேகங்கள் தங்கா முயற்சிய ஆய், Thangaa Muyarchiya Aay - மாறாத முயற்சியையுடையனவாய்க் கொண்டு தாழ் விசும்பின் மீது பாய்ந்து, Thaal Visumbin Meedhu Paayndhu - விசாலமான ஆகாசத்தின் மேலே ஸஞ்சரித்து கண்வளரும், Kanvalarum - திருக்கண் வளர்ந்தருளுகிற என்னுடைய கண்ணன் பால், Ennudaiya Kannan Paal - எமது கண்ணபிரானிடத்திலுள்ள எங்கே புக்கு, Engae Pukku - எந்த தேசத்திலேபோய் எத்தவம் செய்திட்டன கொல், Eththavam Seidittana Kol - எவ்வகையான தபஸ்ஸைச் செய்தனவோ? (அறியேன்.) |