திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2672 | திருவெழுகூற்றிருக்கை || 1 | ஒருபே ருந்தி யிருமலர்த் தவிசில்,
ஒருமுறை அயனை யீன்றனை, | பதவுரை Show / Hideஒரு, Oru - விலக்ஷணமாய் பேர், Per - பெருமை பொருந்திய உந்தி, Undhi - திருநாபியிலுண்டான இரு, Iru - பெரிதான மலர், Malar - (தாமரைப்) பூவாகிற தவிசில், Thavisil - ஆஸனத்தின் மீது ஒருமுறை, Orumurai - ஒருகால் அயனை, Ayanai - பிரமனை ஈன்றனை, Eendranai - படைத்தருளினாய் |
| 2672 | திருவெழுகூற்றிருக்கை || கீழ் வாக்கியத்தில் உலகங்களைப் படைத்தமை சொன்னார், படைத்த உலகத்திற்குத் தீங்கு சேருங்காலத்தில் படாதனபட்டு ரக்ஷிக்கிறபடியைச் சொல்லுகிறார் இதில். குளவிக் கூடுபோலே ராக்ஷ்ஸர்களுக்குக் கூடாகிய இலங்கயை நீறுபடுத்தினபடியைச் சொல்லுகிறார். 2 | ஒருமுறை இருசுடர் மீதினி லியங்கா,
மும்மதிள் இலங்கை யிருகால் வளைய,
ஒருசிலை ஒன்றிய ஈரெயிற் றழல்வாய் வாளியில் அட்டனை, | பதவுரை Show / Hideஒரு முறை, Oru Murai - ஸ்ரீராமனாய் அவதரித்த ஒரு காலத்தில், இரு சுடர், Iru Sudar - சந்திர ஸூர்யர்கள் மீதினில் இயங்கா, Meethinil Iyanga - (அச்சத்தினால்) மேலே ஸஞ்சரிக்க வொண்ணாததும் மும் மதிள், Mum Mathil - நீர்க் கோட்டை, மலைக் கோட்டை வனக் கோட்டை என்கிற மூன்று துர்க்கங்களை யுடையதுமான இலங்கை, Ilankai - லங்கா புரியை இரு கால் வளைய, Iru Kaal Valaiya - இரண்டு நுனியும் ஒரு சிலை, Oru Silai - ஒப்பற்ற சார்ங்க வில்லில் ஒன்றிய ஈர் எயிறு, Onraya Eer Eiyiru - பொருந்தியதும் இரண்டு பற்களை யுடையதும் அழல் வாய், Azhai Vay - நெருப்பைக் கக்குகிற வாயை யுடையதுமான வாளியின், Valiyin - அம்பினால் அட்டனை, Attanai - நீறாக்கினாய் |
| 2672 | திருவெழுகூற்றிருக்கை || அம்பாலே காரியம்கொண்டபடியை அருளிச்செய்தார் கீழ், அழகாலே காரியம்கொண்டபடியை அருளிச்செய்கிறார் இதில். 3 | மூவடி நானிலம் வேண்டி,
முப்புரி _லொடு மானுரி யிலங்கும். மார்வினில்,
இருபிறப் பொருமா ணாகி,
ஒருமுறை யீரடி,
மூவுல களந்தானை, | பதவுரை Show / Hideஒரு முறை, Oru Murai - ஒருகாலத்தில் முப்புரி நூலொடு, Muppuri Noolodu - யஜ்ஞோபவீதத்தோடு கூட மான் உரி, Maan Uri - க்ருஷ்ணாஜிநமும் இலங்கு, Ilangu - விளங்கா நின்ற மார்வினின், Marvinin - திருமார்பையுடைய இருபிறப்பு ஒரு மாண்ஆகி, Irupirappu Oru Maanagi - ஒருப்ராஹ்மண ப்ரஹ்மசாரியாகி நானிலம், Naanilam - பூமியிலே மூ அடி, Moo Adi - மூன்றடி நிலத்தை வேண்டி, Vaendi - யாசித்து ஈர் அடி, Eer Adi - இரண்டு திருவடிகளாலே மூ உலகு, Moo Ulagu - மூன்று லோகங்களை அளந்தனை, Alandhanai - அளந்துகொண்டாய் |
| 2672 | திருவெழுகூற்றிருக்கை || 4 | நாற்றிசை நடுங்க அஞ்சிறைப் பறவை ஏறி,
நால்வாய் மும்மதத் திருசெவி ஒருதனி வேழத் தரந்தையை,
ஒருநாள் இருநீர் மடுவுள் தீர்த்தனை | பதவுரை Show / Hideஒரு நாள், Oru Naal - ஒரு காலத்தில் கால் திசை நடுங்க, Kaal Thisai Nadunga - எங்குமுள்ள ஜனங்களும் நடுங்கும்படியாக (மஹத்தான கோபவேசத்தை ஏறிட்டுக்கொண்டு) நால் வாய், Naal Vaai - தொங்குகின்ற வாயையும் மும்மதம், Mummadham - மூவிடங்களில் மத நீர்ப் பெருக்கையும் இரு செவி, Iru Sevi - இரண்டு காதுகளையும் உடைய அம் சிறை பறவை ஏறி, Am Sirai Paravai Aeri - அழகிய சிறகையுடைய பெரிய திருவடியின்மீது ஏறிக் கொண்டு இரு நீர் மடுவுள், Iru Neer Maduvul - ஆழமான நீரை யுடைய மடுவின் (கரையிலே எழுந்தருளி) ஒரு தனி வேழத்து, Oru Thani Vezhathu - பரம விலக்ஷணனான கஜேந்திராழ்வானுடைய அரந்தையை, Arandhaiya - துக்கத்தை தீர்த்தனை, Theerthanai - நீக்கி யருளினாய் |
| 2672 | திருவெழுகூற்றிருக்கை || 5 | முத்தீ நான்மறை ஐவகை வேள்வி,
அறுதொழில் அந்தணர் வணங்கும் தன்மையை, | பதவுரை Show / Hideமுத் தீ, Muth Thee - மூவகை அக்நிகளையும் நால் மறை, Naal Marai - நால்வகை வேதங்களையும் ஐவகை வேள்வி, Aivagai Velvi - ஐவகை யஜ்ஞங்களையும் அறு தொழில், Aru Thozhil - ஆறு வகைக் கருமங்களையும் உடையரான அந்தணர் வணங்கும் தன்மையை, Andhanar Vanangum Thanmaiyai - ப்ராஹ்மணர்களால் வணங்கப்படுந் தன்மையை உடையனாயிரா நின்றாய் |
| 2672 | திருவெழுகூற்றிருக்கை || 6 | ஐம்புலன் அகத்தினுள் செறுத்து,
நான்குடன் அடக்கி முக்குணத் திரண்டவை யகற்றி,
ஒன்றினில் ஒன்றி நின்று,
ஆங் கிருபிறப் பறுப்போர் அறியும் தன்மையை, | பதவுரை Show / Hideஐம்புலன், Aimpulan - பஞ்சேந்திரியங்களை அகத்தினுள் செறுத்து, Agaththinul Seruththu - (வெளியில் பட்டி மேயவொண்ணாதபடி) உள்ளேயடக்கி நான்கு உடன் அடக்கி, Naanthu Udan Adakki - உண்ணுதல், உறங்குதல், அஞ்சுதல், விஷய போகஞ்செய்தல் என்கிற நான்கையுங் கூட இல்லை செய்து முக் குணத்து, Muk Kunathu - ஸத்வம், ரஜஸ் தமஸ் என்கிற மூன்று குணங்களில் இரண்டு அவை, Irandu Avai - ரஜஸ்ஸையும் தமஸ்ஸையும் அகற்றி, Agattri - விலக்கி ஒன்றினில், Ondrinil - ஸத்வ குண மொன்றிலேயே ஒன்றி நின்று, Onri Nindru - பொருந்தி யிருந்து ஆங்கு, Aangu - அப்படிப்பட்ட நிலைமையின் பலனாக இரு பிறப்பு அறுப்போர், Iru Pirappu Aruppoor - நீண்ட ஸம்ஸார துக்கத்தை நீக்கிக் கொள்ள வல்ல மகான்களாலே அறியும் தன்மையை, Ariyum Thanmaiyai - அறியத்தக்க ஸ்வபாவத்தை உடையையா யிராநின்றாய். |
| 2672 | திருவெழுகூற்றிருக்கை || 7 | முக் கண் நாற்றோள் ஐவாய் அரவோடு ஆறு பொதி சடையோன் அறிவருந் தன்மைப் பெருமையுள் நின்றனை, | பதவுரை Show / Hideமுக்கண், Mukkan - மூன்று கண்களையும் நால் தோள், Naal Thol - நான்கு தோள்களையும் ஐவாய் அரவோடு, Aivai Aravodu - ஐந்து வாயையுமுடைய பாம்பையும் ஆறு பொதி சடையோன், Aaru Pothi Sadai Yon - ஜடையையும் உடையனான ருத்ரனுக்கு அறிவு அரு, Arivu Aru - அறியக் கூடாத தன்மை, Thanmai - ஸ்வபாவத்தை யுடையனாயிருக்கையாகிற பெருமையுள், Perumaiyul - பெருமையிலே நின்றனை, Ninranai - இரா நின்றாய் |
| 2672 | திருவெழுகூற்றிருக்கை || 8 | ஏழுல கெயிற்றினில் கொண்டனை,
கூறிய அறுசுவைப் பயனும் ஆயினை,
சுடர்விடும் ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை,
சுந்தர நாற்றோள் முந்நீர் வண்ண,
நின் ஈரடி ஒன்றிய மனத்தால்,
ஒருமதி முகத்து மங்கையர் இருவரும் மலரன,
அங்கையில் முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை, | பதவுரை Show / Hideஏழ் உலகு, Ezhu Ulagu - உலகங்களையெல்லாம் எயிற்றினில் கொண்டனை, Eiyittrinil Kondonai - (ஸ்ரீவராஹமாகிக் கோட்டில் எடுத்துக் கொண்டாய், கூறிய அறு சுவை பயனும் ஆயின, Kooriya Aru Suvai Payanum Aayin - ஆறுவகை ரஸங்களாகிற ப்ரயோஜநமும் நீயே யாயிரா நின்றாய் அம் கையுள், Am Kaiyul - அழகிய திருக்கையில் சுடர் விடும் ஐ படை, Sudar Vidum Ai Padai - ஒளிவிடா நின்ற பஞ்சாயுதங்களும் அமர்ந்தனை, Amarnthanai - பொருந்தப் பெற்றாய் சுந்தரம் நால் தோள், Sundaram Naal Thol - அழகிய நான்கு திருத் தோள்களையுடையனாய் முந்நீர் வண்ண, Munnir Vanna - கடல் போன்ற வுடிவையுமுடைனான எம்பெருமானே! நின் ஈர் அடி, Nin Eer Adi - உனது உபய பாதங்களை ஆழ்ந்த அன்புடன் ஒன்றிய மனத்தால், Onraya Manaththal - ஆழ்ந்த அன்புடன் ஒருமதி முகத்து மங்கையர் இருவரும், Orumathi Mukaththu Mangaiyar Iravurum - விலக்ஷணனான சந்திரன் போன்ற திரு முகத்தை யுடைய திருமடந்தை மண்மடந்தையிருவரும் மலர் அன அம் கையின், Malar Ana Am Kaiyin - மலர்போல் ஸுகுமாரமான (தங்களது) அழகிய கைகளாலே முப்பொழுதும், Muppozhudum - எப்போதும் வருட, Varud - பிடிக்க அறி துயில் அமர்ந்தனை, Ari Thuyil Amarnthanai - (ஆநந்தமாக) யோக நித்திரையில் எழுந்தருளி யிராநின்றாய் |
| 2672 | திருவெழுகூற்றிருக்கை || 9 | நெறிமுறை நால்வகை வருணமும் ஆயி னை,
மேதகும் ஐம்பெரும் பூதமும் நீயே,
அறுபதம் முரலும் கூந்தல் காரணம் ஏழ்விடை யடங்கச் செற்றனை,
அறுவகைச் சமயமும் அறிவரு நிலையினை,
ஐம்பால் ஓதியை ஆகத் திருத்தினை,
அறமுதல் நான்க வையாய் மூர்த்தி மூன்றாய் இருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து நின்றனை, | பதவுரை Show / Hideநெறிமுறை, Nerimurai - சாஸ்திர முறைப்படியே யுள்ள நால்வகை வருணமும் ஆயினை, Naalvakai Varunamum Aayinai - நான்கு ஜாதிகளின் மரியாதைக்கும் நிர்வாஹகனாயிராநின்றாய் மே தரும் ஐ பெரு பூதமும் நீயே, Me Tarum Ai Peru Poodhamum Neeye - ஆன்மாக்கள் பொருந்தத் தக்க பஞ்ச மஹா பூதங்களுக்கும் ப்ரவர்த்தகனாயிரா நின்றாய் அறுபதம் முரலும் கூந்தல் காரணம், Aruvadham Murulum Koondhal Kaaranam - வண்டுகள் (மது பானத்திற்காக வந்து மொய்ந்து) ரீங்காரம் செய்யப்பெற்ற கூந்தலை யுடைய நப்பின்னைப் பிராட்டிக்காக ஏழ் விடை, Ezhu Vidai - ஏழு ரிஷபங்களையும் அடங்க செற்றினை அறு வகை சமயமும் அறிவு அரு, Adanga Settrinai Aru Vagai Samayamum Arivu Aru - வலியடக்கி நெரித்தாய், பாஹ்ய குத்ருஷ்டி மதஸ்தர்களாலே அறிந்துகொள்ளக்கூடாத நிலையினை, Nilaiyinai - நிலைமையை யுடையனாயிராநின்றாய், ஐம்பால் ஓதியை, Aimpal Othiyai - மென்மை குளிர்த்தி நறுமணம் கருமை நெடுமை என்னும் ஐந்து லக்ஷணங்களமைந்த கூந்தலையுடையளான பிராட்டியை ஆகத்து இருத்தினை, Aagathu Iruththinai - திருமார்பிலே தரித்துக் கொண்டிராநின்றாய், அறம் முதல் நான்கு அவை ஆய், Aram Mudhal Naanthu Avai Aay - தருமம் முதலிய நான்கு புருஷார்த்தங்களையும் கொடுப்பவனாய் மூன்று மூர்த்தி ஆய், Moondru Moorthi Aay - த்ரிமூர்த்தி ஸ்வரூபியான் ஸுக துக்கங்களிரண்டுக்கும் நிர்வாஹகனாய் ஒன்று ஆய் விரிந்து நின்றனை, Ondru Aay Virinthu Nindranai - தான் ஒருவனாயிருந்தும் பிரபஞ்சம் முழுவதிலும் வியாபித்து நின்றாய் |
| 2672 | திருவெழுகூற்றிருக்கை || இனிமேலுள்ள சில அடிகள் ஸ்தோத்ர ஸமாபநம். “ஒரு பேருந்தி“ என்று தொடங்கி “ஒன்றாய் விரிந்து நின்றனை“ என்னுமளவும், எம்பெருமான் ஆச்ரிதர்களைக் காத்தருள்வதற்காகச்செய்த செயல்களையும் மற்றும் அவனுடைய ஸ்வரூப ஸ்வபாவங்களையும் பரக்கப் பேசி மேற்கூறிய திருக்குணங்களெல்லாம் செவ்வனே விளங்கத் திருக்குடந்தையில் கிடக்கிற கிடையிலே ஈடுபட்டு அங்கே சரணாதி பண்ணித் தலைக்கட்டுகிறார். 10 | குன்றா மதுமலர்ச் சோலை வண் கொடிப் படப்பை,
வருபுனல் பொன்னி மாமணி யலைக்கும்,
செந்நெலொண் கழனித் திகழ்வன முடுத்த,
கற்போர் புரிசைக் கனக மாளிகை,
நிமிர்கொடி விசும்பில் இளம்பிறை துவக்கும்,
செல்வம் மல்குதென் திருக்குடந்தை,
அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க,
ஆடர வமளியில் அறிதுயில் அமர்ந்த பரம,
நின் அடியிணை பணிவன் வருமிடர் அகல மாற்றோ வினையே. (2) | பதவுரை Show / Hideகுன்றா மது, Kundraa Madhu - குன்றாத (நிறைந்த) தேனையுடைய மலர்சோலை, Malarcholai - பூக்கள் நிறைந்த சோலைகளை யுடையதும் வண் கொடி படப்பை, Van Kodi Padappai - வெற்றிலைத் தோட்டங்களை யுடையதும் வரு புணல், Varu Punal - எப்போதும் பெருகுகின்ற தீர்த்தத்தை யுடைய பொன்னி, Ponni - கோவேரியானது மா மணி, Maa Mani - சிறந்த ரத்னங்களை அலைக்கும், Alaikkum - அலையெறிந்து கொழக்கப்பெற்றதும் செந்நெல் ஒன் கழனி, Sennel On Kazhani - செந்நெற் பயிர்களாலே அழகிய கழனிகளை யுடையதும் திகழ் வனம் உடுத்த, Thigal Vanam Udutha - விளங்குகின்ற வனங்களை நாற்புறங்களிலுமுடையதும் கற்போர் புரி செய், Karpor Puri Sei - வித்வான்களுடைய நகரமாகச் செய்யப்பெற்றதும் கனகம் மாளிகை நிமிர், Kanagam Maligai Nimir - பொன்மயமான மாளிகைகளின்றும் மேல்முகமாய் ஓங்குகின்ற கொடி, Kodi - த்வஜங்களானவை விசும்பில், Visumbil - ஆகாயத்திலுள்ள இள பிறை, Ila Pirai - பாலசந்திரனை துவக்கும், Thuvakkum - ஸ்பர்சிக்கப்பெற்றதும் செல்வம் மல்கு, Selvam Malku - செல்வம் நிறைந்ததுமான தென் திருகுடந்தை, Then Thirukudandai - தென் திருக்குடந்தையிலே அந்தணர், Andhanar - பிராமணர்கள் மந்திரம் மொழியுடன் வணங்க, Manthiram Mozhiyudan Vananga - வேதவாக்குகளைச் சொல்லிக் கொண்டு வண“கும்படியாக ஆடு அரவு அமளியில், Aadu Aravu Amaliyil - படமெடுத்தாடுகிற ஆதிசேஷனாகிற சயனத்தில் அறி துயில் அமர்ந்த, Ari Thuyil Amarntha - யோக நித்திரை செய்வதில் ஆஸக்தனான பரம, Parama - ஸர்வேச்வரனே! வரும் இடர் அகல, Varum Idar Akala - இந்த ஸம்ஸாரத்தில் நேரக்கூடிய துக்கங்களை நீங்க நின் அடி இணை பணிவன், Nin Adi Inai Panivan - உன்னுடைய உபயபாதங்களை ஆச்ரயிக்கின்றேன் வினை, Vinai - ஸம்ஸாரத்துன்பங்களை மாற்று, Maatru - போக்கி யருளவேணும் |