திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 268 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
268பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி (கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 5
வானத் திலுள்ளீர் வலியீர் உள்ளீரேல் அறையோ வந்து வாங்குமி னென்பவன் போல் ஏனத் துருவாகிய ஈசன் எந்தை இடவனெழ வாங்கி யெடுத்த மலை கானக் களியானை தன் கொம் பிழந்து கது வாய் மதம் சோரத் தன் கை யெடுத்து கூனல் பிறை வேண்டி அண்ணாந்து நிற்கும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே–3-5-5
பதவுரை Show / Hide
ஏனத்து உரு ஆகிய,Eenathu Uru Aahiya - (முன்பு ஒரு காலத்திலே) வராஹ ரூபம் கொண்டருளின
ஈசன்,Eesan - ஸ்வாமியாயும்
எந்தை,Enthai - எனக்குத் தந்தையாயுமுள்ள கண்ணபிரான்,
வானத்தில் உள்ளீர்,Vaanaththil Ullir - “மேலுலகத்திலிருப்பவர்களே! (நீங்கள்)
வலியீர் உள்ளீர் எல்,Valiyeer Ullir El - (என்னோடொக்க) வல்லமை யுள்ளவர்களா யிருப்பீர்களாகில்
அறையோ,Arayo - அறையோ அறை!!
வந்து,Vandhu - (இங்கே) வந்து
வாங்குமின்,Vaangumin - (இம் மலையைக் கையால்) தாங்கிக் கொண்டு நில்லுங்கள்”
என்பவன் போல்,Enbavan Pol - என்று, சொல்லுகிறவன் போல
இடவன்,Idavan - ஒரு மண் கட்டி போலே
எழ வாங்கி,Eza Vaangi - (அநாயஸமாகக்) கிளரப் பிடுங்கி
எடுத்த மலை,Eduktha Malai - எடுத்துக் கொண்டு நிற்கப் பெற்ற மலையாவது;
கானம்,Kaanam - காட்டு நிலங்களில்
களி,Kali - செருக்கித் திரியக் கடவதான
யானை,Yaanai - ஒரு யானையானது
தன் கொம்பு,Than Kombu - (கரை பொருது திரியும் போது ஓரிடத்தில் குத்துண்டு முறிந்த) தன் தந்தத்தை
இழந்து,Izhandhu - இழந்ததனால்
கதுவாய்,Kaduvaai - அக் கொம்பு முறிந்து புண்பட்ட வாயிலே
மதம்,Madham - மத நீரானது
சோர,Soora - ஒழுகா நிற்க
தன் கை,Than Kai - தனது துதிக்கையை
எடுத்து,Edukthu - உயரத் தூக்கி
கூன் நல் பிறை,Koon Nal Pirai - (ஆகாசத்தில் தோற்றுகின்ற) வளைந்த அழகிய பிறையை (தானிழந்த கொம்பாக ப்ரமித்து)
வேண்டி,Vendi - (அதைப் பறித்துக் கொள்ள) விரும்பி
அண்ணாந்து நிற்கும்,Annaandhu Nirkum - மேல் நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கப் பெற்ற
கோவர்,Kovar - குடையே-.