திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 271 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
271பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி (கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 8
சலமா முகில் பல் கணப் போர்க் களத்துச் சர மாரி பொழிந்து எங்கும் பூசலிட்டு நலிவானுறக் கேடகம் கோப்பவன் போல் நாராயணன் முன் முகம் காத்த மலை இலை வேய் குரம்பைத் தவமா முனிவர் இருந்தார் நடுவே சென்று அணார் சொறிய கொலை வாய்ச் சின வேங்கைகள் நின்றுறங்கும் கோவர்த்தன மென்னும் கொற்றக் குடையே–3-5-8
பதவுரை Show / Hide
சலம் மா முகில்,Salam Maa Mukil - நீர் கொண்டெழுந்த காளமேகங்களினுடைய
பல் கணம்,Pal Kanam - பல திரளானது,
எங்கும்,Engum - இடைச்சேரி யடங்கலும்
பூசல் இட்டு,Poosal Ittu - கர்ஜனை பண்ணிக் கொண்டு
போர் களத்து சரம் மாரி பொழிந்து,Por Kalathu Saram Maari Pozhindu - யுத்தரங்கத்தில் சர மழை பொழியுமா போலே நீர் மழையைப் பொழிந்து
நலிவான் உற,Nalivaan Ura - (ஸர்வ ஜந்துக்களையும்) வருத்தப் புகுந்த வளவிலே
நாராயணன்,Narayanan - கண்ணபிரான்
கேடகம் கோப்பவன் போல்,Kedagam Koppavan Pol - கடகு கோத்துப் பிடிக்குமவன்போல (குடையாக எடுத்துப் பிடித்து)
முன்,Mun - முந்துற வருகிற
முகம்,Mugam - மழையினாரம்பத்தை
காத்த,Kaatha - தகைந்த
மலை,Malai - மலையாவது,
கொலை வாய்,Kolai Vaai - கொல்லுகின்ற வாயையும்
சினம்,Sinam - கோபத்தையுமுடைய
வேங்கைகள்,Vengaihal - புலிகளானவை
இலை வேய் குரம்பை,Elai Vey Kurambai - இலைகளாலே அமைக்கப்பட்ட குடில்களில்
தவம் மா முனிவர் இருந்தார் நடுவே சென்று,Thavam Maa Munivar Irundhar Naduve Sendru - இருக்கின்ற தபஸ்விகளான மஹர்ஷிகளின் திரளிலே புகுர
அணார் சொறிய,Anaar Soriya - (அங்குள்ள ரிஷிகள்) (தமது) கழுத்தைச் சொறிய
நின்று உறங்கும்,Nindru Urangum - (அந்த ஸுக பாரவச்யத்தினால், அப்புலிகள்) நின்ற படியே உறங்கப் பெற்ற
கோவர்,Kovar - குடையே-.