Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 273 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
273ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி (கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 10
கொடியேறு செந்தாமரைக் கை விரல்கள் கோலமும் அழிந்தில வாடிற்றில
வடிவேறு திரு வுகிர் நொந்துமில மணி வண்ணன் மலையுமோர் சம்பிரதம்
முடியேறிய மா முகிற் பல் கணங்கள் முன்னெற்றி நரைத்தன போல எங்கும்
குடியேறி யிருந்து மழை பொழியும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே–3-5-10
கொடி ஏறு,Kodi Eru - (ரேகா ரூபமான) த்வஜத்தை யுடைய
செந்தாமரை கை,Senthamarai Kai - செந்தாமரை மலர் போன்ற (கண்ணனது) திருக்கையும்
விரல்கள்,Viralgal - (அதிலுள்ள) திருவிரல்களும் (ஏழுநாள் ஒரு பழுப்பட மலையைத் தாங்கிக் கொண்டு நின்றதனால்)
கோலமும் அழிந்தில,Kolamum Azhindhila - (இயற்கையான) அழகும் அழியப் பெறவில்லை;
வாடிற்றில,Vaadittrila - வாட்டமும் பெறவில்லை;
வடிவு ஏறு,Vadivu Eru - அழகு அமைந்த
திரு உகிரும்,Thiru Ugirum - திரு நகங்களும்
நொந்தில,Nondhila - நோவெடுக்க வில்லை;
மணி வண்ணன்,Mani Vannan - (ஆகையால்) நீலமணி போன்ற நிறத்தனான கண்ணபிரான்
மலையும்,Malaiyum - (எடுத்தருளின) மலையும்
ஓர் சம்பிரதம்,Or Sampiratham - (அம் மலையை இவன் எடுத்து நின்ற நிலைமையும்) ஒரு இந்திர ஜாலவித்தையாயிருக்கின்றது;
முடி ஏறிய,Mudi Eriya - (அந்தமலை எது? என்னில்;) கொடுமுடியின் மேலேறிய
மா முகில்,Maa Mukil - காளமேகங்களினுடைய
பல் கணங்கள்,Pal Kanangal - பல ஸமூஹங்களானவை
எங்கும் மழை பொழிந்து,Engum Mazhai Pozhindhu - மலைச் சாரல்களிலெல்லாம் மழை பெய்து (வெளுத்ததனால்)
முன் நெற்றி நரைத்தன போல,Mun Netri Naraiththana Poola - (அம்மலையினுடைய) முன்புறம் நரைத்தாற் போல் தோற்றும்படி
குடி ஏறி இருக்கும்,Kudi Eri Irundhu - (கொடுமுடியின்மேல்) குடிபுகுந்திருக்கப் பெற்ற
கோவர்,Kovar - குடையே-.