Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 274 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
274ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி (கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 11
அரவில் பள்ளி கொண்டு அரவம் துரந்திட்டு அரவப் பகை யூர்தி யவனுடைய
குரவிற் கொடி முல்லைகள் நின்றுறங்கும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடை மேல்
திருவிற் பொலி மா மறை வாணர் புத்தூர்த் திகழ் பட்டர் பிரான் சொன்ன மாலை பத்தும்
பரவு மன நன்குடைப் பத்தருள்ளார் பரமான வைகுந்தம் நண் ணுவரே–3-5-11
அரவில்,Aravil - திருவனந்தாழ்வான்மீது
பள்ளி கொண்டு,Palli Kondu - (பாற்கடலில்) பள்ளி கொள்பவனும்
அரவம்,Aravam - (அதைவிட்டு ஆயர் பாடியில் வந்து பிறந்து) காளியநாகத்தை
துரந்திட்டு,Thurandhittu - ஒழித்தருளினவனும்
அரவம் பகை ஊர்தி,Aravam Bhagai Oorthi - ஸர்ப்ப சத்ருவான கருடனை வாஹனமாக வுடையவனுமான கண்ணனுடைய
குரலில் கொடி முல்லைகள் நின்று உறங்கும்,Kuralil Kodi Mullaihal Nindru Urangum - குரவ மரத்தில் முல்லைக் கொடிகள் படர்ந்து
கோவர்த்தனம் என்னும் கொற்றம் குடை மேல்,Kovarthanam Ennum Kotrham Kudai Mel - கோவர்த்தனமென்ற கொற்றக் குடை விஷயமாக
திருவில்,Thiruvil - ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயாலே
பொலி,Poli - விளங்கா நின்றுள்ள
மறைவாணர்,Marai Vaanaar - வைதிகர்கள் இருக்குமிடமான
புத்தூர்,Puthoor - ஸ்ரீவில்லிபுத்தூரில்
பட்டர் பிரான்,Pattar Piraan - பெரியழ்வார்
சொன்ன,Sona - அருளிச் செய்த
மாலை பத்தும்,Maalai Paththum - இப் பத்துப் பாசுரங்களையும்
பரவும் மனம்,Paravum Manam - அப்யஸிக்கைக்கீடான மநஸ்ஸை
நன்கு உடை,Nangu Udai - நன்றாக உடையரான
பத்தர் உள்ளார்,Paththar Ullaaar - பக்தர்களாயிருப்பார்
பரமான வைகுந்தம்,Paramaan Vaikundham - பரம பத்ததை
நண்ணுவர்,Nannavur - அடையப் பெறுவர்.