| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 275 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஆறாம் திருமொழி - நாவலம்) (கண்ணன் புல்லங்குழலூதற்சிறப்பு) 1 | நாவலம் பெரிய தீவினில் வாழும் நங்கை மீர்கள் இது ஓரற்புதம் கேளீர் தூ வலம் புரி யுடைய திருமால் தூய வாயில் குழலோசை வழியே கோவலர் சிறுமியர் இளங் கொங்கை குதுகலிப்ப உடலுளவிழ்ந்து எங்கும் காவலும் கடந்து கயிறு மாலை யாகி வந்து கவிழ்ந்து நின்றனரே–3-6-1 | அம்,Am - அழகிய பெரிய,Periya - விசாலமான நாவல் தீவினில்,Naaval Theevinil - ஜம்பூத்வீபத்தில் வாழும்,Vaazhum - வாழா நின்றுள்ள நங்கைமீர்கள்,Nangaimirgal - பெண்காள்! ஓர் அற்புதம் இது,Or Arputham Ithu - ஒரு ஆச்சரியமான இச் சங்கதியை கேளீர்,Keleer - செவி கொடுத்துக் கேளுங்கள்;(யாது அற்புதமென்னில்;) தூ,Thoo - சுத்தமான வலம்புரி உடைய,Valamburi Udaiya - ஸ்ரீபாஞ்சஜந்யத்தையுடைய திருமால்,Thirumal - ச்ரியபதியான கண்ண பிரானுடைய தூய வாயில்,Thooya Vaayil - அழகிய திருப்பவளத்தில் (வைத்து ஊதப்பெற்ற) குழல்,Kuzhal - புல்லாங்குழலினுடைய ஓசை வழியே,Osai Vazhiyai - இசையின் வழியாக, கோவலர் சிறுமியர,Kovalr Sirumiyar - இடைப் பெண்களினுடைய இள கொங்கை,Ila Kongai - இள முலைகளானவை குதுகலிப்ப,Kuthukalippa - (நாங்கள் முன்னே போகிறே மென்று நெறித்து) ஆசைப்பட உடல்,Udal - சரீரமும் உள்,Ul - மநஸ்ஸும் அவிழ்ந்து,Avizhndhu - சிதிலமாகப் பெற்று எங்கும்,Engum - எங்குமுள்ள காவலும்,Kaavalum - காவல்களையும் கடந்து,Kadandhu - அதிக்கிரமித்துவிட்டு கயிறு மாலை ஆகி வந்து,Kayiru Maalai Aagi Vandhu - கயிற்றில்தொடுத்த பூமாலைகள்போல (த் திரளாக) வந்து கவிழ்ந்து நின்றனர்,Kavizhndhu Nindranar - (கண்ணனைக் கண்டு வெள்கிக்) கவிழ்தலையிட்டு நின்றார்கள்; [இதிலும் மிக்க அற்புதமுண்டோ] |