| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 276 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஆறாம் திருமொழி - நாவலம்) (கண்ணன் புல்லங்குழலூதற்சிறப்பு) 2 | இடவணரை யிடத்தோளொடு சாய்த் திருகை கூடப் புருவம் நெரிந்தே குட வயிறு பட வாய் கடை கூடக் கோவிந்தன் குழல் கொடடூதின போது மட மயில்களோடு மான் பிணை போலே மங்கைமார்கள் மலர்க் கூந்தலவிழ உடை நெகிழ வோர் கையால் துகில் பற்றி யொல்கியோ டரிக் கணோட நின்றனரே–3-6-2 | கோவிந்தன்,Govindhan - கண்ணபிரான் இட அணர,Ida Anara - (தனது) இடப்பக்கத்து மோவாய்க் கட்டையை இடத் தோளொடு சாய்ந்து,Idath Tholodu Saindhu - இடத்தோள் பக்கமாகச் சாய்ந்து குடம்பட,Kudampada - குடம் போலக் குமிழ்த்துத் தோற்றவும் வாய்,Vaay - வாயானது கடை கூட,Kadaikooda - இரண்டருகுங்குலியவும் (இவ்வறான நிலைமையாக) குழல் கொடு,Kuzhal Kodu - வேய்ங்குழலைக் கொண்டு ஊதின போது,Oodhina Podhu - ஊதின காலத்திலே மடம் மயில்களொடு,Madham Mayilgalodu - அழகிய மயில்களையும் மான் பிணை போலே,Maan Pinai Pole - மான் பேடைகளையும் போன்றுள்ள மங்கைமார்கள்,Mangaimargal - யுவதிகள் இரு கை,Eru Kai - இரண்டு திருக்கைகளும் கூட,Kooda - (குழலோடு) கூடவும் புருவம்,Puruva - புருவங்களானவை நெரித்து ஏற,Nerithu Era - நெறித்து மேலே கிளறவும் வயிறு,Vayiru - வயிறானது மலர் கூந்தல்,Malar Koondhal - (தங்களுடைய) மலரணிந்த கூந்தல் முடியானது அவிழ,Avizha - அவிழ்ந்து அலையவும் உடை,Udai - அரைப் புடவையானது நெகிழ,Negizha - நெகிழவும் துகில்,Thugil - (நெகிழ்ந்த) அத் துகிலை ஓர் கையால்,Or Kaiyaal - ஒரு கையாலே பற்றி,Patri - பிடித்துக் கொண்டு ஒல்கி,Olgi - துவண்டு அரி ஓடு கண் ஓட நின்றார்,Ari Odu Kan Oda Nindrar - செவ்வரி, கருவரிகள் ஓடாயின்ற கண்கள் (கண்ணபிரான் பக்கலிலே) ஓடப்பெற்றனர் |