Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 277 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
277ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஆறாம் திருமொழி - நாவலம்) (கண்ணன் புல்லங்குழலூதற்சிறப்பு) 3
வானிள வரசு வைகுந்தக் குட்டன் வாசு தேவன் மதுரை மன்னன் நந்த
கோனிள வரசு கோவலர் குட்டன் கோவிந்தன் குழல் கொடு ஊதின போது
வானிளம் படியர் வந்து வந்தீண்டி மனமுருகி மலர்க் கண்கள் பனிப்ப
தேனளவு செறி கூந்தலவிழச் சென்னி வேர்ப்பச் செவி சேர்த்து நின்றனரே–3-6-3
வான்,aan - பரம பதத்துக்கு
இள அரசு,Ela Arasu - யுவராஜனாயும்
வைகுந்தர்,Vaikunthar - அப் பரம பதத்திலுள்ள நித்ய ஸூரிகளுக்கு
குட்டன்,Kuttan - பரிந்து நோக்க வேண்டும்படியான பருவத்தை யுடையானாயும்
வாசுதேவன்,Vasudevan - வஸுதேவர்க்கு மகனாகப் பிறந்தவனாயும்
மதுரை மன்னன்,Madurai Mannan - வட மதுரைக்கு அரசனாயும்
நந்தர்கோன் இள அரசு,Nandarkon Ila Arasu - நந்தகோபர்க்குப் (பிள்ளையாய் வளர்ந்து) இளவரசனாயும்
கோவலர் குட்டன்,Kovalarkuttan - இடையர்களுக்கு பரிந்து நோக்க வேண்டும்படியான பிள்ளையாயுமுள்ள
கோவிந்தன்,Govindhan - கண்ண பிரான்
குழல் கொடு ஊதின போது;,Kuzhal Kodu Oodhina Podhu - குழல் கொடு ஊதின போது;
வான்,Vaan - ஸ்வர்க்க லோகத்திலுள்ள
இள படியர்,Ela Padiyar - பொகத்துக்கு உரிய சரீரத்தை யுடையரான மாதர்
வந்து வந்து ஈண்டி,Vandhu Vandhu Indi - (ஸ்ரீப்ருந்தாவனத்திலே) திரள் திரளாக வந்து குவிந்து
மனம் உருகி,Manam Urugi - (தங்கள்) நெஞ்சு உருகப் பெற்று
மலர் கண்கள்,Malar Kangal - குவளை மலர்போலழகிய கண்களினின்றும்
பனிப்ப,Panippa - ஆநந்த நீர் துளித்து விழ
தேன் அளவு,Then Alavu - தேனோடு கூடின
செறி கூந்தல்,Seri Koondhal - செறிந்த மயிர்முடியானது
அவிழ,Avizha - அவிழ
சென்னி,Senni - நெற்றியானது
வேர்ப்ப,Verppa - வேர்வையடைய
செவி,Sevi - (இவ் வகை விகாரங்களை யடைந்து) (தமது) காதுகளை
சேர்த்து,Serthu - (அக்குழலோசையிலே) மடுத்து
நின்றனர்,Nindranar - திகைத்து நின்றார்கள்