Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 278 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
278ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஆறாம் திருமொழி - நாவலம்) (கண்ணன் புல்லங்குழலூதற்சிறப்பு) 4
தேனுகன் பிலம்பன் காளிய னென்னும் தீப்பப் பூடுகள் அடங்க உழக்கி
கானகம் படி உலாவி யுலாவிக் கருஞ் சிறுக்கன் குழ லூதின போது
மேனகையொடு திலோத்தமை அரம்பை உருப்பசி யரவர் வெள்கி மயங்கி
வானகம் படியில் வாய் திறப்பின்றி ஆடல் பாடலவை மாறினர் தாமே–3-6-4
தேனுகன்,Thenukan - தேநுகாஸுரன்
பிலம்பன்,Pilamban - ப்ரலம்பஸுரன்
காளியன்,Kalian - காளிய நாகம்
என்னும்,Ennum - என்று சொல்லப் படுகிற
தீப்பபூடுகள் அடங்க,Theeppapoodugal Adanga - கொடிய பூண்டுகளை யெல்லாம்
உழக்கி,Uzhakki - தலை யழித்துப் போகட்டு
கான் அகம்,Kaan Agam - காட்டுக்குள்ளே
படி,Padi - இயற்கையாக
உலாவி உலாவி,Ulaavi Ulaavi - எப்போதும் உலாவிக் கொண்டு
கரு,Karu - கரிய திருமேனியை யுடைய
சிறுக்கன்,Sirukkan - சிறு பிள்ளையான கண்ணன்
குழல் ஊதின போது;,Kuzhal Oodhina Podhu - குழல் ஊதின போது;
மேனகையொடு,Menakaiyodu - மேனகையும்
திலோத்தமை,Thilothamai - திலோத்தமையும்
அரம்பை,Arambai - ரம்பையும்
உருப்பசி,Uruppasi - ஊர்வசியும் (ஆகிற)
அரவர்,Aravar - அப்ஸரஸ் ஸ்த்ரீகள்
மயங்கி,Mayangi - (அக் குழலோசையைக் கேட்டு) மோஹமடைந்து
வெள்கி,Velki - வெட்கப் பட்டு
வான் அகம்,Vaan Agam - தேவ லோகத்திலும்
படியில்,Padiyil - பூ லோகத்திலும்
வாய் திறப்பு இன்றி,Vaai Thirappu Indri - வாயைத் திறவாமல்
ஆடல் பாடல் இவை,Aadal Paadal Ivai - ஆடுகை பாடுகை என்கிற இக் காரியங்களை
தாமே,Thaame - தாமாகவே
மாறினர்,Maarinar - விட்டொழிந்தனர்