| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 279 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஆறாம் திருமொழி - நாவலம்) (கண்ணன் புல்லங்குழலூதற்சிறப்பு) 5 | முன் நரசிங்கமதாகி அவுணன் முக்கியத்தை முடிப்பான் மூ வுலகில் மன்னரஞ்சும் மது சூதனன் வாயில் குழலி னோசை செவியைப் பற்றி வாங்க நன்னரம்புடைய தும்புருவோடு நாரதனும் தம் தம் வீணை மறந்து கின்னர மிதுனங்களும் தம் தம் கின்னரம் தொடுகிலோ மென்றனரே–3-6-5 | முன்,Mun - முற்காலத்திலே நரசிங்கம் அது ஆகி,Narasingam Athu Aagi - நரஸிம்ஹ ரூபங்கொண்டு அவுணன்,Avunan - ஹிரண்யாஸுரனுடைய முக்கியத்தை,Mukkiyaththai - மேன்மையை முடிப்பான்,Mudippan - முடித்தவனும் மூ உலகில் மன்னர்,Moo Ulahil Mannar - மூன்று லோகத்திலுமுள்ள அரசர்கள் அஞ்சும்,Anjum - (தனக்கு) அஞ்சும்படியா யிருப்பவனுமான மதுசூதனன்,Madhusoodhanan - கண்ணபிரானுடைய வாயில்,Vaayil - வாயில் (வைத்து ஊதப் பெற்ற) குழலின்,Kuzhalin - வேய்ங்குழலினுடைய ஓசை,Osai - ஸ்வரமானது செவியை,Sevviyai - காதுகளை பற்றி வாங்க,Patri Vaanga - பிடித்திழுக்க நல் நரம்பு உடைய,Nal Narambu Udaiya - நல்ல வீணையைக் கையிலுடைய தும்புருவோடு,Thumburuvodu - தும்புரு முனிவனும் நாரதனும்,Naradhanum - நாரத மஹர்ஷியும் தம் தம்,Tham Tham - தங்கள் தங்களுடைய வீணை,Veenai - வீணையை மறந்து,Marandhu - மறந்து விட கின்னரம் மிதுனங்களும்,Kinnaram Mithunangalum - கிந்நர மிதுநம் என்று பேர் பெற்றுள்ளவர்களும் தம் தம் கின்னரம்,Tham Tham Kinnaram - தங்கள் தங்கள் கின்னர வாத்தியங்களை தொடுகிலோம் என்றனர்,Thodukilom Endranar - ’(இனித் தொடக்கடவோமல்லோம்’ என்று விட்டனர். |