திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 28 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
28பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 6
மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை சித்தம் பிரியாத தேவகி தன்வயிற்றில் அத்தத்தின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன் முத்த மிருந்தவா காணீரே முகிழ் நகையீர் வந்து காணீரே–1-2-6
பதவுரை Show / Hide
மத்தம்,Maththam - மதத்தையுடைய
களிறு,Kaliru - யானைகளை நிர்வஹிக்குமவரான
வசுதேவர் தம்முடை,Vasudevar thammudai - ஸ்ரீவஸுதேவருடைய
சித்தம் பிரியாத,Siththam priyadha - மனத்தை விட்டுப் பிரியாத
தேவகி தன்,Devagi than - தேவகியினுடைய
வயிற்றில்,Vayitrril - வயிற்றிலே
அத்தத்தின் பத்தாம் நாள்,Aththaththin paththaam naal - ஹஸ்த நக்ஷத்ரத்துக்குப் பத்தாவதான திரு நாளிலே
தோன்றிய,Thonriya - திருவவதரித்த
அச்சுதன்,Achchuthan - கண்ண பிரானுடைய
முத்தம் இருந்த ஆ காணீரே,Muththam irundha aa kaanire - சண்ணமிருந்த படியை காணீர்!!
முகிழ் நகையீர் வந்து காணீரே,Mugil nagaiyeer vandhu kaanire - புன் சிரிப்பை யுடைய பெண்காள்! வந்து காணீர்!!