Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 280 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
280ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஆறாம் திருமொழி - நாவலம்) (கண்ணன் புல்லங்குழலூதற்சிறப்பு) 6
செம் பெருந் தடங் கண்ணன் திரள் தோளன் தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம்
நம் பரமன் இந்நாள் குழலூதக் கேட்டவர்கள் இடருற்றன கேளீர்
அம்பரம் திரியும் காந்தப்ப ரெல்லாம் அமுத கீத வலையால் சுருக் குண்டு
நம்பர மன்றென்று நாணி மயங்கி நைந்து சோர்ந்து கைம் மறித்து நின் றனரே–3-6-6
செம்பெரு தடங் கண்ணன்,Semberu Thadang Kannan - சிவந்து மிகவும் பெரிய திருக்கண்களை யுடையனாய்
திரள் தோளன்,Thiral Tholan - பருத்த தோள்களை யுடையனாய்
தேவகி சிறுவன்,Devagi Siruvan - தேவகியின் பிள்ளையாய்
தேவர்கள் சிங்கம்,Devargal Singam - தேவ சிம்ஹமாய்
நம் பரமன்,Nam Paraman - நமக்கு ஸ்வாமியான பரம புருஷனாயிரா நின்ற கண்ணபிரான்
இந் நாள்,En Naal - இன்றைய தினம்
குழல் ஊத,Kuzhal Oodha - வேய்ங் குழலை ஊத
கேட்டவர்கள்,Kaettavargal - (அதன் இசையைக்) கேட்டவர்கள்
இடர் உற்றன,Edar Utrana - அவஸ்தைப்பட்ட வகைகளை
கேளீர்,Kaaleer - (சொல்லுகிறேன்) கேளுங்கள்
அம்பரம்,Ambaram - (அந்த இடர் யாதெனில்) ஆகாசத்திலே
திரியும்,Thiriyum - திரியா நின்ற
காந்தப்பர் எல்லாம்,Gaanthappar Ellaam - காந்தருவர் அனைவரும்
அமுதம் கீதம் வலையால் ,Amudham Geetham Valayal - அமுதம் போல் இனிதான குழலிசையகிற வலையிலே
சுருக்குண்டு,Surukkundu - அகப்பட்டு
நம் பரம் அன்று என்று,Nam Param Andru Endru - (பாடுகையாகிற) சுமை (இனி) நம்முடையதன்றென்று அறுதியிட்டு
நாணி,Naani - (முன்பெல்லாம் பாடித் திரிந்ததற்கும்) வெட்கப்பட்டு
மயங்கி,Mayangi - அறிவழிந்து
நைந்து,Naindhu - மனம் சிதிலமாகப் பெற்று
சோர்ந்து,Sornthu - சரீரமுங் கட்டுக் குலையப் பெற்று
கை மறித்து நின்றனர்,Kai Mariththu Ninranar - (இனி நாம் ஒருவகைக் கைத்தொழிலுக்குங் கடவோமலோம் என்று) கையை மடக்கிக் கொண்டு நின்றார்கள்