Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 281 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
281ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஆறாம் திருமொழி - நாவலம்) (கண்ணன் புல்லங்குழலூதற்சிறப்பு) 7
புவியுள் நான் கண்டதோ ரற்புதம் கேளீர் பூணி மேய்க்கும் இளங் கோவலர் கூட்டத்து
அவையுள் நாகத் தணையான் குழலூத அமர லோகத் தளவும் சென்றிசைப்ப
அவி யுணா மறந்து வானவரெல்லாம் ஆயர் பாடி நிறையப் புகுந்து ஈண்டி
செவி யுணாவின் சுவை கொண்டு மகிழ்ந்து கோவிந்தனைத் தொடர்ந்து என்றும் விடாரே–3-6-7
புவியுள்,Puviyul - பூமியிலே
நான் கண்டது ஓர் அற்புதம்,Naan Kandathu Or Arputham - நான் கண்ட ஒரு ஆச்சர்யத்தைச் (சொல்லுகிறேன்)
கேளீர்,Kaaleer - கேளுங்கள்; (அது யாதெனில்)
பூணி,Pooni - பசுக்களை
மேய்க்கும்,Meikkum - மேய்க்கா நின்ற
இள கோவலர்,Ela Kovalar - இடைப் பிள்ளைகள்
கூட்டத்து அவையுள்,Kootathu Avaiyul - திரண்டிருக்கின்ற ஸபையிலே
நாகத்து அணையான்,Naagathu Anaiyaan - சேஷ சாயியான கண்ண பிரான்
குழல் ஊத,Kuzhal Oodha - குழலூதினவளவிலே, (அதன் ஓசையானது)
அமார் லோகத்து அளவும் சென்று,Amaar Lokathu Alavum Sendru - தேவ லோகம் வரைக்கும் பரவி
இசைப்ப,Isaippa - (அங்கே) த்வனிக்க (அதைக் கேட்ட)
வானவர் எல்லாம்,Vaanavar Ellaam - தேவர்களனைவரும்
அவி உணா,Avi Una - ஹவிஸ்ஸு உண்பதை
மறந்து,Maranthu - மறந்தொழிந்து
ஆயர் பாடி நிறைய புகுந்து,Aayar Paadi Nireya Pugundhu - இடைச்சேரி நிறையும்படி (அங்கே) வந்து சேர்ந்து
ஈண்டி,Eendi - நெருங்கி
செவி உள் நா,Sevi Ul Naa - செவியின் உள் நாக்காலே
இன் சுவை,In Suvai - (குழலோசையின்) இனிய ரஸத்தை
கொண்டு,Kondu - உட் கொண்டு
மகிழ்ந்து,Magizhndhu - மனங்களித்து
கோவிந்தனை,Govindanai - கண்ண பிரானை
தொடர்ந்து,Thodarndhu - பின் தொடர்ந்தோடி
என்றும்,Endrum - ஒரு க்ஷண காலமும்
விடார்,Vidaar - (அவனை) விடமாட்டாதிருந்தனர்