| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 282 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஆறாம் திருமொழி - நாவலம்) (கண்ணன் புல்லங்குழலூதற்சிறப்பு) 8 | சிறு விரல்கள் தடவிப் பரிமாறச் செங்கண் கோடச் செய்ய வாய் கொப்பளிக்க குறு வெயர்ப் புருவம் கூடலிப்பக் கோவிந்தன் குழல் கொடு ஊதின போது பறவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படுகாடு கிடப்ப கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக் கவிழ்ந் திறங்கிச் செவி யாட்ட கில்லாவே–3-6-8 | சிறு விரல்கள்,Siru Viragal - (தனது) சிறிய கை விரல்கள் தடவி,Thadavi - (குழலின் துளைகளைத்) தடவிக் கொண்டு பரிமாற,Parimaara - (அக் குழலின் மேல்) வியாபரிக்கவும் செம் கண்,Sem Kann - செந்தாமரை போன்ற கண்கள் கோட,Koda - வக்ரமாகவும் செய்ய வாய்,Seiya Vaai - சிவந்த திருப்பவளம் கொப்பளிப்ப,Koppalippa - (வாயுவின் பூரிப்பாலே) குமிழ்க்கவும் குறு வெயர் புருவம்,Kuru Veyar Puruva - குறு வெயர்ப் பரும்பின புருவமானது கூடலிப்ப,Koodalippa - மேற் கிளர்ந்து வளையவும் கோவிந்தன் குழல் கொடு ஊதின போது பறவையின் கணங்கள்,Paravaiyin Kanangal - (அக் குழலோசையைக் கேட்ட) பக்ஷிகளின் கூட்டங்கள் கூடு துறந்து,Koodu Thurandhu - (தம் தம்) கூடுகளை விட்டொழிந்து வந்து,Vandhu - (கண்ணனருகில்) வந்து சூழ்ந்து,Soozhndhu - சூழ்ந்து கொண்டு படு காடு கிடப்ப,Padu Kaadu Kidappa - வெட்டி விழுந்த காடு போலே மெய் மறந்து கிடக்க கறவையின் கணங்கள்,Karavaiyin Kanangal - பசுக்களின் திரள் கால் பரப்பிட்டு,Kaal Parappittu - கால்களைப் பரப்பி கவிழ்ந்து இறங்கி,Kavizhnthu Irangi - தலைகளை நன்றாக தொங்க விட்டுக் கொண்டு செவி ஆட்ட கில்லா,Sevi Aatta Killaa - காதுகளை அசைக்கவும் மாட்டாதே நின்றன. |