| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 283 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஆறாம் திருமொழி - நாவலம்) (கண்ணன் புல்லங்குழலூதற்சிறப்பு) 9 | திரண்டெழு தழை மழை முகில் வண்ணன் செங்கமல மலர் சூழ் வண்டினம் போலே சுருண்டிருண்ட குழல் தாழ்ந்த முகத்தான் ஊதுகின்ற குழ லோசை வழியே மருண்டு மான் கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர இரண்டு பாடும் துலங்காப் புடை பெயரா எழுது சித்திரங்கள் போல நின்றனவே–3-6-9 | திரண்டு எழு,Thirandu Ezu - திரண்டுமேலெழுந்த தழை,Thazhai - தழைத்திராநின்ற மழை முகில்,Mazhai Mukil - காள மேகம் போன்ற வண்ணன்,Vannan - வடிவுடைய கண்ணபிரான் செம் கமலம் மலர் சூழ்,Sem Kamalam Malar Soozh - செந்தாமரைப் பூவைச் சூழ்ந்து படிந்துள்ள வண்டு இனம் போலே,Vandu Inam Pole - வண்டுத் திரளைப் போன்று சுருண்டு இருண்ட,Surundu Irunda - சுருட்சியையும் கறு நிறத்தையுமுடைய குழல்,Kuzhal - திருக்குழல்களானவை தாழ்ந்த,Thaazhndha - தாழ்ந்து அலையப் பெற்ற முகத்தான்,Mugathaan - முகத்தை யுடையவனாய்க் கொண்டு ஊதுகின்ற,Ooduginra - ஊதுகிற குழல் ஓசை வழியே,Kuzhal Osai VazhiyE - குழலின் ஓசையாகிற வழியிலே (அகப்பட்டு) மான் கணங்கள்,Maan Kanangal - மான் கூட்டங்கள் மருண்டு,Marundu - அறிவழிந்து மேய்கை மறந்து,Meykai Marandhu - மேய்ச்சலையும் மறந்து மேய்ந்த,Meyndha - வாயில் கவ்வின புல்லும்,Pullum - புல்லும் கடைவாய்வழி,Kadaivaayvazhi - கடைவாய் வழியாக சோர,Sora - நழுவி விழ, இரண்டு பாடும்,Erandu Paadum - முன் பின்னாகிற இரண்டறாகிலும் துலுங்கா,Thulunga - (காலை) அசைக்காமலும் புடை,Pudi - பக்கங்களில் பெயரா,Peyaraa - அடியைப் பெயர்ந்து இட மாட்டாமலும் எழுது சித்திரங்கள் போல நின்றன ,Ezhudhu Sithirangal Pola Nindrana - (சுவரில்) எழுதப்பட்ட சித்திரப் பதுமை போலத் திகைத்து நின்றன |