| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 285 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஆறாம் திருமொழி - நாவலம்) (கண்ணன் புல்லங்குழலூதற்சிறப்பு) 11 | குழலிருண்டு சுருண்டேறிய குஞ்சிக் கோவிந்த னுடைய கோமள வாயில் குழல் முழைஞ்சுகளினூடு குமிழ்த்துக் கொழித்திழிந்த அமுதப் புனல் தன்னை குழல் முழவம் விளம்பும் புதுவைக் கோன் விட்டு சித்தன் விரித்த தமிழ் வல்லார் குழலை வென்ற குளிர் வாயினராகிச் சாது கோட்டியுள் கொள்ளப் படுவாரே–3-6-11 | இருண்டு சுருண்டு ஏறிய,Erundu Surundu Eriya - கறுத்து சுருண்டு நெடுக வளர்ந்த குழல் குஞ்சி,Kuzhal Kunji - அலகலகான மயிர்களை யுடையனான கோவிந்தனுடைய,Govindhanudaiya - கண்ணபிரானுடைய கோமள வாயில்,Komala Vaayil - அழகிய வாயில்(வைத்து ஊதப் பெற்ற) குழல்,Kuzhal - வேய்ங்குழலினுடைய முழஞ்சுகளினூடு,Muzhanjugalinoodu - துளைகளிலே குமிழ்த்து,Kumizhtthu - நீர்க்குமிழி வடிவாகக் கிளர்ந்து(பிறகு அது உடையப் பெற்று) கொழித்து எழுந்த,Kozhiththu Ezhundha - கொழித்துக் கொண்டு மேற்கிளம்பின அமுதம் புனல் தன்னை,Amudham Punal Thannai - அம்ருத ஜலத்தை குழல் முழவம் விளம்பும்,Kuzhal Muzhavam Vilambum - குழலோசை யோடொக்கப் [பரம யோக்யமாக] அருளிச் செய்தவரும் புதுவை கோன்,Puduvai Koon - ஸ்ரீவில்லிப்புத்தூர்க்குத் தலைவருமான விட்டு சித்தன்,Vittu Siththan - பெரியாழ்வார் விரிந்த,Virindha - விஸ்தாரமாகக் கூறிய தமிழ்,Tamil - இத்தமிழ்ப் பாசுரங்களை வல்லார்,Vallaar - ஓத வல்லவர்கள் குழலை வென்ற குளிர் வாயினர் ஆகி,Kuzhalai Vendra Kuleer Vaayinar Aagi - திருக் குழலோசையின் குளிர்த்தியையங் கீழ்ப் படுத்தித் தான் மேலாம்படி குளிர்ந்த வாய் மொழியை யுடையராய் சாது கோட்டியுள்,Saathu Koththiyul - ஸ்ரீ வைஷ்ணவர்கள் கோஷ்டியில் கொள்ளப் படுவார்,Kollappaduvaar - பரிக்ரஹிக்கப் படுவார்கள். |