| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 286 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 1 | ஐய புழுதி உடம்ப ளைந்து இவள் பேச்சு மலந்த லையாய் செய்ய நூலின் சிற்றாடை செப்பி னுடுக்கவும் வல்ல ளல்லள் கையி னில் சிறு தூதை யோடு இவள் முற்றில் பிரிந்துமிலள் பைய ரவணைப் பள்ளி யானோடு கை வைத்து இவள் வருமே–3-7-1 | இவள்,Eval - இச் சிறு பெண்ணானவள் ஐய புழுதியை,Ayya Puzhudhiyai - அழகிய புழுதியை உடம்பு அளைந்து,Udambu Alaindhu - உடம்பிலே பூசிக் கொண்டு பேச்சும் அலந்தலை ஆய்,Pechchum Alandhalai Aay - ஒன்றோடொன்று அந்வயியாத பேச்சை யுமுடையளாய் செய்ய நூலின் சிறு ஆடை,Seyya Noolin Siru Aadai - சிவந்த நூலாலே செய்விக்கப்பட்ட சிற்றாடையை செப்பன்,Seppan - செம்மையாக உடுக்கவும் வல்லன் அல்லன்,Udukkavum Vallan Allan - [அரையில் தங்கும்படி] உடுக்கவும் மாட்டாதவளாயிரா நின்றாள்; இவள்,Eval - இப்படியொரு பருவத்தை யுடையளான இவள் சிறு தூதையோடு,Siru Thoodhaiyodu - (மணற்சோறாக்கும்) சிறிய தூதையையும் முற்றிலும்,Mutrilum - சிறு சுளகையும் கையினில்,Kaiyinil - கையில் நின்றும் பிரிந்து இவள்,Pirindhu Ival - விட்டொழிகின்றிலள்; இவள்,Eval - இப்படிக்கொத்த விளையாட்டை யுடைய இவள் பை அரவு அணை பள்ளியானொடு,Pai Aravu Anai Palliyaanodu - சேஷ சாயியான எம்பெருமானுடனே கை வைத்து வரும்,Kai Vaitthu Varum - கை கலந்து வாரா நின்றாள். |