திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 287 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
287பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 2
வாயில் பல்லும் எழுந்தில மயிரும் முடி கூடிற்றில சாய்விலாத குறுந்தலைச் சில பிள்ளைகளோ டிணங்கி தீயிணக்கிணங்காடி வந்து இவள் தன்னன்ன செம்மை சொல்லி மாயன் மா மணி வண்ணன் மேல் இவள் மாலுறு கின்றாளே–3-7-2
பதவுரை Show / Hide
வாயில்,Vayil - (இம் மகளுடைய) வாயில்
பல்லும் எழுந்தில,Pallum Ezhundhila - பற்களும் முளைக்க வில்லை;
மயிரும் முடி கூடிற்றில,Mayirum Mudi Koodittrila - மயிரும் சேர்த்து முடிக்கும்படி கூடவில்லை.
இவள்,Eval - இப்படிப்பட்ட இவள்
இவண்,Evan - இந்தப் பருவத்தில்
சாய்வு இலாத,Saivu Ilaadha - தலை வணக்கமில்லாத
குறுந்தலை,Kurunthalai - தண்மையில் தலை நின்ற
சில பிள்ளைகளோடு,Sila Pillailaodu - சில பெண் பிள்ளைகளோடு
இணங்கி,Enangi - ஸஹ வாஸம் பண்ணி
தீ இணக்கு இணங்காடி வந்து,Thee Inakku Inangaadi Vandhu - (அதற்குப் பலனாக) பொல்லாத இணக்கத்தை (களவுப் புணர்ச்சியை)ச் செய்து வந்து (இத்தனை போது எங்குப் போனாய்? யாரோடு இணங்கி வந்தாய்? என்று நான் கேட்டால்)
தன் அன்ன,Than Anna - தனக்கு ஒத்த வார்த்தைகளை
செம்மை சொல்லி,Semmai Solli - கபடமற்ற வார்த்தை போல் தோற்றும்படி சொல்லி இவள்;
மாயன் மா மணிவண்ணன் மேல்,Maayan Maa Manivannan Mel - அற்புதச் செய்கைகளையும் நீலமணி நிறத்தையுமுடையனான கண்ணபிரான்
மாலுறுகின்றாள்,Maal Urugindraal - மோஹப்படுகிறாள்.