திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 288 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
288பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 3
பொங்கு வெண் மணல் கொண்டு சிற்றிலும் முற்றத் திழைக்க லுறில் சங்கு சக்கரம் தண்டு வாள் வில்லு மல்லது இழைக்க லுறாள் கொங்கை இன்னம் குவிந்தெ ழுந்தில கோவிந்த னோடு இவளை சங்கை யாகி என் னுள்ளம் நாள் தொறும் தட்டுளுப்பாகின்றதே–3-7-3
பதவுரை Show / Hide
பொங்கு,Pongu - (இவள்)நுண்ணியதாய்
வெள்,Vel - வெளுத்திரா நின்ற
மணல் கொண்டு,Manal Kondu - மணலாலே
முற்றத்து,Mutrathu - முற்றத்திலே
சிற்றில்,Sittril - கொட்டகத்தை
இழைக்கலுறிலும்,Izhaikkalurilum - நிர்மாணஞ் செய்யத் தொடங்கினாலும்
சங்கு சக்கரம் தண்டு வாள் வில்லும் அல்லது,sangu chakaram Thandu Vaal Villum Alladhu - சங்கு முதலிய எம்பெருமான் சின்னங்களை யொழிய (மற்றொன்றையும்)
இழைக்கலுறாள்,Izhaikkalurall - இழைக்க நினைப்பதில்லை;
இன்னம்,Innam - (இவளுக்கோ வென்றால்) இன்றளவும்
கொங்கை,Kongai - முலைகளானவை
குவிந்து எழுந்தில,Kuvindhu Ezhundhila - முகம் திரண்டு கிளர்ந்தன வில்லை;
இவளை,Ivalai - இப்படி இளம் பருவத்தளான இவளை
கோவிந்தனோடு சங்கை ஆகி,Govindhanoodu Sangai Aagi - கண்ணபிரானோடு சம்பந்த முடையவளாகச் சங்கித்து
என் உள்ளம்,En Ullam - என் நெஞ்சமானது
நாள் தொறும்,Naal Thorum - ஸர்வ காலமும்
தட்டுளுப்பாகின்றது,Thattuluppaagindrathu - தடுமாறிச் செல்லா நின்றது.