திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 289 | பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 4 | ஏழை பேதை ஓர் பாலகன் வந்து என் பெண் மகளை யெள்கி
தோழிமார் பலர் கொண்டு போய்ச் செய்த சூழ்ச்சியை யார்க்குரைக்கேன்
ஆழியா னென்னு மாழ மோழையில் பாய்ச்சி அகப்படுத்தி
மூழை யுப்பறியாத தென்னும் மூதுரையு மிலளே–3-7-4 | பதவுரை Show / Hideஏழை,Ezhaai - சாபல்யமுடையவளும் பேதை,Paedhai - அறியாமை யுடையவளும் ஓர் பாலகன்,Or Balagan - இளம் பருவத்தை யுடையளுமான என் பெண் மகளை,En Pen Magalai - எனது பெண்பிள்ளையை தோழிமார் பலர் வந்து,Thozhimaaar Palar Vandhu - பல தோழிகள் அணுகி வந்து எள்கி,Elgi - (விளையாட வரவேணுமென்று) வஞ்சித்து கொண்டு போய்,Kondu Poi - அழைத்துக் கொண்டு போய் ஆழியான் என்னும்,Aazhiyan Ennum - ஸர்வேச்வரன் என்று ப்ரஸித்தமான ஆழம் மோழையில்,Aazham Mozhaiyil - ஒருவராலும் நிலைகொள்ள வொண்ணாத கீழாற்றில் பாய்ச்சி,Paaychchi - உள்ளுறத் தள்ளி அகப்படுத்தி,Agappaduthi - (அதிலே) அகப்படுத்தி செய்த சூழ்ச்சியை,Seidha Soozhchiyai - (இவ்வாறு) செய்த கபடத் தொழில்களை ஆர்க்கு உரைக்கேன்,Aarkku Uraikkaen - யாரிடம் முறையிடுவேன்?; மூழை உப்பு அறியாதது என்னும் மூதுரையும் இவள்,Moozhai Uppu Ariyaadhadhu Ennum Moodhuraiyum Ival - (இம் மகளோ வென்றால்) “அகப்பையானது (பதார்த்தத்தின்) ரஸத்தை அறியாது” என்கின்ற பழ மொழியின் அறிவையும் தன்னிடத்து உடையவளல்லள். |