திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2890 | திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி-திருமலைக்கு புறம்பான மலையை பிராபிக்கையே நல் விரகு என்கிறார்) 5 | திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது
அற முயலாழிப் படையவன் கோயில்
மறுவில் வண் சுணை சூழ் மாலிரும்சோலை
புறமலை சாரப் போவது கிறியே –2-10-5 | பதவுரை Show / Hidetiram utai,திறம் உடை - பலவகைப்பட்ட valattal,வலத்தால் - வலிமையைக் கொண்டு tivinai,தீவினை - பாவங்களை perukkatu,பெருக்காது - மிகையாகச் செய்யாமல் aram muyal ali pataiyavan koyil,அறம் முயல் ஆழி படையவன் கோயில் - ஆச்ரித ரக்ஷண தருமத்திலே முயல்கின்ற திருவாழியை ஆயுதமாகவுடைய பெருமானது கோயிலாய். maru il,மறு இல் - அழுக்கற்ற van cuaina cul,வண் சுஐன சூழ் - வளமான களைகளால் சூழப்பட்ட maliruncolai,மாலிருஞ்சோலை - திருமாலிருஞ் சோலையினுடைய puram malai,புறம் மலை - பக்கத்திலுள்ள தொருமலையை cara,சார - கிட்டுமாறு povatu,போவது - போவதானது kiri,கிறி - நல்ல உபாயம். |