| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 29 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 7 | இருங்கை மத களிறு ஈர்க்கின் றவனை பருங்கிப் பறித்துக் கொண்டு ஓடு பரமன் தன் நெருங்கு பவளமும் நேர் நாணும் முத்தும் மருங்கும் இருந்தவா காணீரே வாணுதலீர் வந்து காணீரே–1-2-7 | இரு கை மத களிறு,Eru kai matha kaliru - பெரிய துதிக்கையையுடைய மத்த கஜமான குவலயாபீடத்தை ஈர்க்கின்றவனை,Eerkkindravanai - தன் வசமாக நடத்தா நின்றுள்ள பாகனை பருங்கி,Parungi - கொன்று பறித்துக்கொண்டு,Pariththukkondu - (யானையின் கொம்புகளை) முறித்துக் கொண்டு ஓடு,Odu - (கம்ஸனிருக்குமிடத்தைத் தேடிக்கொண்டு) ஓடின பரமன் தன்,Paraman than - பரமபுருஷனான கண்ணனுடைய நெருங்கு,Nerungu - செறியக் கோத்த பவளமும்,Pavalamum - பவள வடமும் நேர் நாணும்,Ner naanum - அழகிய அரை நாணும் முத்தும்,Muththum - முத்துவடமும் (இவற்றோடே சேர்ந்த) மருங்கும் இருந்த ஆ,Marungum irundha aa - திருவரையும் இருந்தபடியை காணீர்! வாள் நுதலீர் காணீர்!,Vaal nudhaleer kaanire - ஒளி பொருந்திய நெற்றியை யுடைய பெண்காள்! வந்து காணீர்!! |