திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 290 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
290பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 5
நாடும் ஊரும் அறியவே போய் நல்ல துழாயலங்கள் சூடி நாரணன் போமிட மெல்லாம் சோதித்துழி தருகின்றாள் கேடு வேண்டு கின்றார் பலருளர் கேசவனோடு இவளை பாடு காவலிடுமி னென்றென்று பார் தடுமாறினதே–3-7-5
பதவுரை Show / Hide
நாடும்,Naadum - விசேஷ ஜ்ஞாநிகளும்
ஊரும்,Oorum - ஸாமான்ய ஜ்ஞாநிகளும்
அறிய,Ariya - அறியும்படியாக [பஹிரங்கமாக]
போய்,Poi - வீட்டை விட்டுப் புறம்பே போய்
நல்ல,Nalla - பசுமை மாறாத
துழாய் அலங்கில்,Thuzhaai Alangil - திருத் துழாய் மாலையை
சூடி,Soodi - (பகவத் ப்ரஸாதமென்று சொல்லிக் கொண்டு) தரித்துக் கொண்டு
நாரணன் போம் இடம் எல்லாம்,Naaranan Pom Idam Ellaam - எம்பெருமான் போகிற இடம் முழுவதும்
சோதித்து உழி தருகின்றாள்,Sodhiththu Uzhi Tharugindraal - தேடித் திரியா நின்றாள்;
கேடு வேண்டுகின்றார்,Kaedu Vaendugindraar - இக்குடிக்குக் கேடு விளைய வெணுமென்று கோருமவர்கள்
பலர் உளர்,Palar Ular - பல பேருண்டு;
இவளை,Evalai - (ஆகையால்) எம்பெருமானைத் தேடித் திரிகிற இவளை
கேசவனோடு,Kesavanodu - (அந்த) என்பெருமாளோடு (சேர்ப்பதற்காக அந்தப்புரத்திற் கொண்டாடுவோம்.)
பாடு காவல் இடுமின்,Paadu Kaaval Idumin - அருகு காவலிடுங்கள்
என்று என்னை,Endru Ennai - என்று இதையே பல காலும் சொல்லிக் கொண்டு
பார்,Paar - பூமியிலுள்ள அநுகூல ஜநமானது
தடுமாறினது,Thadumaarinadhu - மனங்குழம்பிச் செல்லா நின்றது