திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 291 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
291பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 6
பட்டம் கட்டிப் பொற்றோடு பெய்து இவள் பாடகமும் சிலம்பும் இட்டமாக வளர்த்தெடுத் தேனுக்கு என்னோடு இருக்கலுறாள் பொட்டப் போய்ப் புறப்பட்டு நின்று இவள் பூவைப்பூ வண்ணா வென்னும் பட்ட வார் குழல் மங்கைமீர் இவள் மாலுறுகின்றாளே–3-7-6
பதவுரை Show / Hide
வட்டம் வார்,Vattam Vaar - சுருட்சியையும் நீட்சியையும் உடைய
குழல்,Kuzhal - கூந்தலையுடைய
மங்கைமீர்,Mangaimeer - மாதர்காள்!,
பட்டம் கட்டி,Pattam Katti - (இம் மகளுக்கு) (நெற்றிக்கு அணியான)பட்டத்தைக் கட்டியும்
பொன் தோடு,Pon Thodu - (காதுக்கு அணியான) பொன் தோட்டையும்
பாடகமும் சிலம்பும்,Paadagamum Silambum - (கழலணியான) பாடகத்தையும் சிலம்பையும்
பெய்து,Peithu - இட்டும்
இவள் இட்டம் ஆக,Eval Ettam Aaga - இவளுடைய இஷ்டாநுஸாரமாக
வளர்த்து எடுத்தேனுக்கு என்னோடு,Valarthu Eduthtenukku Ennodu - (இவளை) வளர்த்தெடுத்த என்னோடு
இவள் இருக்கலுறாள்,Eval Erukkaluraal - இவள் இருக்க மாட்டேனென்கிறாள்;
பொட்ட,Potta - (பின்னை ஏன் செய்கின்றாளெனில்;) திடீரென்று
போய்,Poi - என்னைக் கைவிட்டுப் போய்
புறப்பட்டு நின்று,Purappattu Nindru - (எல்லாருங்காணத் தெருவிலே) புறப்பட்டு நின்று
பூவைப் பூ வண்ணா என்னும்,Poovaip Poo Vannaa Ennum - “காயாம்பூப்போன்ற மேனி நிறமுடைய கண்ணபிரானே!” என்று வாய் விட்டுக் கூப்பிடா நின்றாள்;
இவள் மாலுறுகின்றாள்,Eval Maalurugindraal - (அவ்வளவில் அவன் அருகுவாரா தொழியில்) இவள் மோஹத்தை யடைகின்றாள்.