திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 292 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
292பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 7
பேசவும் தெரியாத பெண்மையின் பேதையேன் பேதை இவள் கூசமின்றி நின்றார்கள் தம்மெதிர் கோல் கழிந்தான் மூழையாய் கேசவா வென்றும் கேடிலீ யென்றும் கிஞ்சுக வாய் மொழியாள் வாசவார் குழல் மங்கைமீர் இவள் மாலுறு கின்றாளே–3-7-7
பதவுரை Show / Hide
வாசம் வார்,Vaasam Vaar - வாஸனையையும் நீட்சியையுமுடைய
குழல்,Kuzhal - கூந்தலையுடைய
மங்கைமீர்,Mangaimeer - பெண்காள்!
பேதையேன்,Pethaien - பேதைமையை யுடையளான என்னுடைய
பேதை,Pethai - பெண் பிள்ளையும்
பேசவும் தெரியாத பெண்மையின்,Pesavum Theriyatha Penmaiyin - (தன்னுடைய ஆசாரத்துக்கு ஒரு கெடுதி விளைந்ததாகப் பிறர்) ஒரு வார்த்தை சொன்னாலும் (அதைப்) பொறுக்க மாட்டாத ஸ்த்ரீத்வத்தை யுடையவளும்
கிஞ்சுகம் வாய் மொழியாள்,Kinchukam Vaaimozhiyal - கிளியினுடைய வாய்மொழி போன்ற இனிய வாய் மொழியை யுடையவளுமான
இவள்,Eval - இவள்,
நின்றார்கள் தம் எதிர்,Nindraargal Tham Ethir - மர்யாதை தவறாமல் இருக்குமவர்கள் முன்னே,
கூசம் இன்றி,Koosam Inri - கூச்சமில்லாமல்
கோல் கழிந்தான் மூழை ஆய்,Kol Kazhindhaan Moozhai Aay - கோலை விட்டு நீங்கின அகப்பை போல (என்னோடு உறவற்றவளாய்க் கொண்டு) கேசவனே! என்றும்
கேசவா என்றும்,Kesavaa Endrum - கேசவனே! என்றும்
கேடு இலீ என்றும்,Kedu Ilee Endrum - அழிவற்றவனே! [அச்யுதனே!] என்றும் வாய் விட்டுச் சொல்லி
இவள் மாலுறுகின்றாள்,Eval Maalurugindraal - இவள் மோஹமடையா நின்றாள்;
ஏ,A - இரக்கம்