| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2921 | திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 3 | அண்ணல் மாயன் அணிகொள் செந் தாமரைக் கண்ணன் செங்கனி வாய்க் கரு மாணிக்கம் தெண்ணிறை சுனை நீர்த் திரு வேங்கடத்து எண் இல் தொல் புகழ் வானவர் ஈசனே. –3-3-3 | அணிக்கொள், Anikkol - அழகுபொருந்திய செம் தாமரை கண்ணன், Sem thamarai kannan - செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களையுடையவனும் செம் கனிவாய், Sem kanivai - சிவந்த கனிபோன்ற அதரத்தையுடையவனும் கருமாணிக்கம், Karumaanikkam - நீலரத்னம்போல் திருமேனி விளக்கத்தை யுடையவனும் தென் நிறை சுனை நீர், Then nirai sunai neer - தெளிவையும் நிறைவையுமுடைய சுனைநீர் பொருந்திய திருவேங்கடத்து, Thiruvengadathu - திருமலையில் எண் இல் தொல் புகழ், Enum il thol pugazh - எண்ணிறந்த நித்திய கல்யாண குணங்களையுடையவனும் வானவர் ஈசன், Vaanavar Eesan - நித்யஸூரிகட்குத் தலைவனுமான எம்பெருமான் அண்ணல், Annal - நமக்கு ஸ்வாமியும் மாயன், Maayan - ஆச்சரிய சேஷ்டிதங்களையுடையவனுமானவன் |