திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 293 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
293பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 8
காறை பூணும் கண்ணாடி காணும் தன் கையில் வளை குலுக்கும் கூறை யுடுக்கும் அயர்க்கும் தங் கொவ்வைச் செவ்வாய் திருத்தும் தேறித் தேறி நின்று ஆயிரம் பேர்த் தேவன் திறம் பிதற்றும் மாறில் மா மணி வண்ணன் மேல் இவள் மாலுறுகின்றாளே–3-7-8
பதவுரை Show / Hide
இவள்,Eval - இப் பெண் பிள்ளையானவள்
காறை,Kaarai - பொற் காறையை
பூணும்,Poonum - (தன் கழுத்தில்) பூணா நின்றாள்;
கண்ணாடி காணும்,Kannadi Kaanum - (அக்காறையுங் கழுத்துமான அழகை) கண்ணாடிப் புறத்தில் காணா நின்றாள்;
தன் கையில்,Than Kaiyil - தன் கையிலிருக்கிற
வளை குலுங்கும்,Valai Kulungum - வளையல்களை குலுக்கா நின்றாள்;
கூறை,Koora - புடவையை
உடுக்கும்,Udukum - (ஒழுங்குபட) உடுத்துக் கொள்ளா நின்றாள்; (அவன் வரவுக்கு உடலாக இவ்வளவு அலங்கரித்துக் கொண்டவளவிலும் அவ்ன் வரக் காணாமையாலே,)
அயர்க்கும்,Ayarkkum - தளர்ச்சி யடையா நின்றாள்;
தன் கொவ்வை செம் வாய் திருத்தும்,Than Kovvai Sem Vaai Thiruthum - (மறுபடியுந் தெளிந்து இதற்கு மேலாக அலங்கரித்துக்கொள்ளத் தொடங்கி) கோவக் கனிபோலச் சிவந்துள்ள தன் அதரத்தைத் (தாம்பூல சர்வணாதிகளால்) ஒழுங்கு படுத்தா நின்றாள்;
தேறித் தேறி நின்று,Theerith Theeri Nindru - மிகவுந் தெளிந்து நின்று
ஆயிரம் பேர் தேவன் திறம் பிதற்றும்,Aayiram Per Devan Thiram Pitharuthum - ஸஹஸ்ர நாமப் பொருளான எம்பெருமானுடைய குணங்களை வாய் புலற்றா நின்றாள்;
மாறு இல்,Maaru El - (அதன் பிறகு) ஒப்பற்றவனும்
மா மணி வண்ணன் மேல்,Maa Mani Vannan Mel - நீலமணி போன்ற நிறத்தை யுடையனுமான(அக்) கண்ண பிரான் மேல்
மாலுறுகின்றாள்,Maalurugindraal - மோஹியா நின்றாள்