திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 294 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
294பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 9
கைத்தலத் துள்ள மாடழியக் கண்ணாலங்கள் செய்து இவளை வைத்து வைத்துக் கொண்டு என்ன வாணிபம் நம்மை வடுப் படுத்தும் செய்த் தலை யெழு நாற்றுப் போல் அவன் செய்வன செய்து கொள்ள மைத் தட முகில் வண்ணன் பக்கல் வளர விடுமின்களே–3-7-9
பதவுரை Show / Hide
கைத்தலத்து உள்ள மாடு அழிய,Kaithalathu Ulla Maadu Azhiy - கையிலுள்ள பணத்தைச் செலவழித்து
கண்ணாலங்கள் செய்து,Kannaalangal Seidhu - (இவளுக்குச் செய்ய வேண்டிய) கல்யாணங்களைப் பண்ணி
இவளை,Evalai - (நமக்கடங்காத) இவளை
வைத்து வைத்துக் கொண்டு,Vaithu Vaithukkondu - நியமித்தும் காவலிட்டும் வைத்துக் கொண்டிருப்பதனால்
என்ன வாணிபம்,Enna Vaanipam - என்ன பயனுண்டாம்;
நம்மை வடுப்படுத்தும்,Nammai Vadupaduthum - (பயனுண்டாகாதொழிவது மன்றி) நமக்கு அவத்யத்தையும் உண்டாக்கும்;
செய்தலை எழு நாற்று போல்,Seithalai Ezu Naatru Pol - (என்று தாயாராகிய நான் சொல்ல, இதைக் கேட்ட பந்துக்கள்) ”வயலிலே வளர்ந்த நாற்றை அவ்வயலுக் குடையவன் தன் இஷ்டப்படி விநியோகம் கொள்வது போல,
அவள் செய்வன செய்து கொள்ள,Aval Seivana Seidhu Kolla - (இவளையும்) (ஸ்வாமியாகிய)அவன் தான் செய்ய நினைத்தவற்றை (தடையற)ச் செய்து கொள்ளும்படி
மை தட முகில் வண்ணன் பக்கல்,Mai Thada Mugil Vannan Pakkal - கறுத்துப் பெருத்த மேகம் போன்ற வடிவுடைய அக் கண்ண பிரானிடத்தில்
வளர,Valara - (இவள்) வாழும்படி
விடுமின்கள்,Vidumingal - (இவளைக் கொண்டு போய்) விட்டு விடுங்கள் " (என்கிறார்கள் என்று, தாய் தானே சொல்லுகிறபடி.)