| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 295 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 10 | பெருப் பெருத்த கண்ணாலங்கள் செய்து பேணி நம் மில்லத் துள்ளே இருத்துவா னெண்ணி நாமிருக்க இவளும் ஒன் றெண்ணுகின்றாள் மருத்துவப் பதம் நீங்கினா ளென்னும் வார்த்தை படுவதன் முன் ஒருப் படுத்திடுமின் இவளை உலகளந்தா னிடைக்கே–3-7-10 | பெருபெருத்த,Peruperutha - (இவளுக்கு) மிகவும் விசேஷமான கண்ணாலங்கள் செய்து,Kannaalangal Seidhu - கல்யாண காரியங்களைச்செய்து பேணி,Paeni - அன்பு பூண்டு நம் இல்லத்துள்ளே,Nam Illathulle - நம் வீட்டுக்குள்ளேயே இருந்துவான் எண்ணி நாம் இருக்க,Irundhuvaan Enni Naam Irukka - (இவளை) இருக்கச் செய்ததாக நாம் நினைத்திருக்க இவளும்,Ivalum - இவளொ வென்றால் ஒன்று எண்ணுகிறாள்,Ondru Ennugiraal - (நம் எண்ணத்திற்கு விபரீதமாக) மற்றொன்றை எண்ணுகிறாள். மருத்துவப்பதம் நீங்கினாலென்னும் வார்த்தைபடுவதன் முன்,Maruthuvapadham Neenginaalennum Vaarthaipaduvathan Mun - (என்று தாயாகிய நான் சொல்ல இதைக் கேட்ட பந்துக்கள்) வயித்தியன் தான் செய்யும் மருந்தில் பதம் பார்த்து செய்யாவிடில் அது கை தவறுவது போல இவள் பதம் பார்த்து நாம் செய்யாமையாலே இவள் கைகழிந்தாளேன்கிற அபவாதம் பிறப்பதற்கு முன். இவளை,Ivalai - இவளை உலகு அளந்தானிடைக்கே,Ulaku Alandhaanidaikke - உலகளந்தருளின கண்ணபிரானிடத்திலேயே(கொண்டு போய்) ஒருபடுத்திடுமின்,Orupaduthidumin - சேர்த்துவிடுங்கள் (என்று கூறியதைத் தாய் கூறுகின்றாள்) |