திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 297 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
297பெரியாழ்வார் திருமொழி || (எட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை) (தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்து தாய் பலபடி வருந்திக்கூறும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 1
நல்லதோர் தாமரைப் பொய்கை நாண் மலர் மேல் பனி சோர அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு அழகழிந்தா லொத்த தாலோ இல்லம் வெறியோடிற் றாலோ என் மகளை எங்கும் காணேன் மல்லரை யட்டவன் பின் போய் மதுரைப் புறம் புக்காள் கொலோ–3-8-1
பதவுரை Show / Hide
நல்லது ஓர் தாமரைப் பொய்கை,Nalladhu Or Thaamaraip Poigai - அழகிய ஒரு தாமரைக் குளமானது (தன்னிடத்துள்ள)
நாள் மலர் மேல்,Naal Malar Mel - அப்போதலர்ந்த பூவின் மேல்
பனி சோர,Pani Soora - பனி பெய்ததனால்
அல்லியும் தாதும்,Alliyum Thaadhum - (அம் மலரினது) உள்ளிதழும் புறவிதழும் உதிரப் பெற்று
அழகு அழிந்தால் ஒத்தது,Azhagu Azhindhaal Oththathu - அழகு அழியப் பெறுவது போல
இல்லம்,Ellam - (இவ்)வீடானது
வெறி ஓடிற்று,Veri Odidritru - வெறிச்சென்றிருக்கிறது;
என் மகளை,En Magalai - என் பெண் பிள்ளையை
எங்கும்,Engum - ஓரிடத்திலும்
காணேன்,Kaanen - காண்கின்றிலேன்;
மல்லரை அட்டவன் பின் போய்,Mallarai Attavan Pin Poi - மல்லர்களை அழித்த கண்ணபிரான் பின்னே போய்
மதுரைப் புறம்,Mathuraip Puram - மதுரைக்கு அருகிலுள்ள திருவாய்ப்பாடியில்
புக்கார்கொல் ஓ,Pukkaar Kol O - புகுந்தாளாவள் கொல்?.