திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 298 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
298பெரியாழ்வார் திருமொழி || (எட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை) (தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்து தாய் பலபடி வருந்திக்கூறும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 2
ஒன்றும் அறிவொன்றில்லாத உருவறைக் கோபாலர் தங்கள் கன்று கால் மாறுமா போலே கன்னி யிருந்தாளைக் கொண்டு நன்றும் கிறி செய்து போனான் நாராயணன் செய்த தீமை என்றும் எமர்கள் குடிக்கு ஓரேச்சுக் சொலாயிடுங் கொலோ–3-8-2
பதவுரை Show / Hide
ஒன்றும் அறிவு ஒன்று இல்லாத,Ondrum Arivu Ondru Illaatha - பொருந்திய ஞானம் சிறிதுமில்லாதவர்களும்
உரு அறை,Uru Arai - ரூப ஹீநர்களுமான
கோபாலர் தங்கள்,Gopaalar Thangal - இடையரானவர்கள்
கன்று கால் மாறும் ஆ போலே,Kanru Kaal Maarum Aa Pole - கண்ணுக்கழகிய கன்றுகளை உடையவர்களறியாமல் களவிலே கொண்டு போவது போல,
கன்னி இருந்தாளை,Kanni Irundhaalai - கன்னிகைப் பருவத்தளாய் எனக்கடங்கி யிருந்த பெண்ணை
நன்றும் கிறி செய்து,Nandrum Kiri Seidhu - நல்ல உபாயங்களைப் பண்ணி
கொண்டு போனான்,Kondu Ponnaan - (தெரியாமல்) அபஹரித்துக் கொண்டு போன
நாராயணன்,Naaraayanan - கண்ண பிரான்
செய்த தீமை,Seidha Theemai - செய்த தீம்பானது
எமர்கள் குடிக்கு,Emargal Kudikku - எங்கள் குலத்துக்கு
என்றும்,Endrum - சாச்வதமான
ஓர் ஏச்சு ஆயிடும் கொல் ஓ,Or Echu Aayidum Kol O - ஒரு பழிப்பாகத் தலைக் கட்டுமோ?.