திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 299 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
299பெரியாழ்வார் திருமொழி || (எட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை) (தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்து தாய் பலபடி வருந்திக்கூறும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 3
குமரி மணம் செய்து கொண்டு கோலம் செய்து இல்லத் திருத்தி தமரும் பிறரும் அறியத் தாமோதரற்கென்று சாற்றி அமரர் பதியுடைத் தேவி அரசாணியை வழி பட்டு துமில மெழப் பறை கொட்டித் தோரணம் நாட்டிடுங் கொலோ–3-8-3
பதவுரை Show / Hide
குமரி மணம் செய்து கொண்டு,Kumari Manam Seidhu Kondu - கன்னிகை யவஸ்தையிற் செய்ய வேண்டிய மங்கள விசேஷத்தைச் செய்து
கோலம் செய்து,Kolam Seidhu - (ஆடை ஆபரணங்களால்) அலங்கரித்து
இல்லத்து,Ellathu - விவாஹ மந்திரத்தில்
இருத்தி,Eruthi - உட்கார வைத்து
தமரும்,Thamarum - பந்து வர்க்கங்களும்
பிறரும்,Pirarum - மற்றுமுள்ள உதாஸீநர்களும்
அறிய,Ariya - அறியும்படி
தாமோதரற்கு என்று சாற்றி,Thaamodhararku Endru Saatri - (இவள்) கண்ண பிரானுக்கு (க்கொடுக்கப் பட்டாள்) என்று சொல்லி,
அமரர் பதியுடைய தேவி,Amarar Padhiyudaiya Devi - (பிறகு) தேவாதி தேவனான கண்ண பிரானுக்கு மனைவியாகப் பெற்ற என் மகள்
அரசாணியை,Arasaani - (ஜாதிக்குத் தக்க ஒழுக்கமாக) அரசங்கிளையை
வழிபட்டு,Vazhipattu - பிரதக்ஷிணம் பண்ண
துமிலம் எழப் பறை கொட்டி,Thumilam Ezha Parai Kotti - பேரொலி கிளம்பும்படி பறைகளை முழக்கி
தோரணம் நாட்டிடும் கொல் ஓ,Thoranam Naattidum Kol O - மகா தோரணங்களை (ஊரெங்கும்) நாட்டி அலங்கரித்துக் கொண்டாடுவர்களோ?.