| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 30 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 8 | வந்த மதலைக் குழாத்தை வலி செய்து தந்தக் களிறு போல் தானே விளையாடும் நந்தன் மதலைக்கு நன்று மழகிய உந்தி இருந்தவா காணீரே ஒளி யிழையீர் வந்து காணீரே–1-2-8 | வந்த,Vanda - (தன்னோடு விளையாட) வந்த மதலை குழாத்தை,Mathalai kuzhaaththai - சிறு பிள்ளைகளின் கூட்டத்தில் வலி செய்து,Vali seydhu - தன் வல்லமையைக் காட்டிக் கொண்டு தந்தம் களிறு போல்,Thandham kaliru pol - கொம்பு முளைத்த யானைக் குட்டி போல் தானே,Thaane - தானே முக்கியனாய் நின்று விளையாடும்,Vilayaadum - விளையாடுமவனாய் நந்தன்,Nandhan - நந்தகோபர்க்கு மதலைக்கு,Mathalaikku - (விதேயனான) பிள்ளையாகிய கண்ணனுடைய நன்றும் அழகிய,Nandrum azhagiya - மிகவுமழகிதான உந்தி இருந்த ஆ காணீரே,Undhi irundha aa kaanire - நாபி இருக்கிறபடியை காணீர்! ஒளி,Oli - ஒளியால் விஞ்சின இழையீர் வந்து காணீரே,Ezhaiyeer vandhu kaanire - ஆபரணங்களணிந்த பெண்காள்! வந்து காணீர்!! |