Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 300 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
300ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (எட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை) (தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்து தாய் பலபடி வருந்திக்கூறும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 4
ஒருமகள் தன்னை யுடையேன் உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல வளர்த்தேன் செங்கண்மால் தான் கொண்டு போனான்
பெருமகளாய்க் குடி வாழ்ந்து பெரும் பிள்ளை பெற்ற அசோதை
மருமகளைக் கண்டுகந்து மணாட்டுப் புறம் செய்யுங் கொலோ–3-8-4
ஒரு மகள் தன்னை உடையேன்-,Oru Magal Thannai Udaiyen - ஒரே மகளை உடையளாகிய நான்
உலகம் நிறைந்த புகழால்,Ulagam Niraindha Pugazhal - உலகமெங்கும் பரவின கீர்த்தியோடு.
திரு மகள் போல,Thiru Magal Pola - பெரிய பிராட்டியாரைப் போல்
வளர்த்தேன்,Valarththen - சீராட்டி வளர்த்தேன்;
செம் கண் மால்,Sem Kan Maal - (இப்படி வளர்ந்த இவளை) செந்தாமரைக் கண்ணனான ஸர்வேச்வரன்
தான்,Thaan - தானே (ஸாக்ஷாத்தாக பந்து)
கொண்டு போனான்,Kondu Ponaan - (நானறியாமல்) கொண்டு போனான்;
பெரு மகளாய் குடி வாழ்ந்து,Peru Magalaai Kudi Vazhndhu - (போனால் போகட்டும்;) (இடைச்சேரியில்) ப்ரதாந ஸ்த்ரீயாய்க் குடி வாழ்க்கை வாழ்ந்து
பெரும் பிள்ளை பெற்ற அசோதை,Perum Pillai Petra Asothai - பெருமை தங்கிய பிள்ளையைப் பெற்றவளான யசோதைப் பிராட்டியானவள்
மருமகளை,Marumagalai - (தன்) மருமகளான என் மகளை
கண்டு உகந்து,Kandu Ugandhu - கண்டு மகிழ்ந்து
மணாட்டுப் புறம் செய்யும் கொல் ஓ,Manattup Puram Seyyum Kol O - மணவாட்டிக்குச் செய்யக் கடவதான சீர்மைகளைச் செய்வளோ?