திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 302 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
302பெரியாழ்வார் திருமொழி || (எட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை) (தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்து தாய் பலபடி வருந்திக்கூறும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 6
வேடர் மறக்குலம் போலே வேண்டிற்றுச் செய்து என் மகளை கூடிய கூட்டமே யாகக் கொண்டு குடி வாழுங் கொலோ நாடும் நகரும் அறிய நல்லதோர் கண்ணாலம் செய்து சாடிறப் பாய்ந்த பெருமான் தக்கவா கைப்பற்றுங் கொலோ–3-8-6
பதவுரை Show / Hide
சாடி இற பாய்ந்த பெருமான் ,Saadi Ira Paayndha Perumaan - சகடாஸுரனை முறித்து தள்ளின திருவடிகளை யுடைய கண்ணபிரான்,
வேடர்,Vedhar - வேடர்களையும்
மறக் குலம் போலே,Marak Kulam Pole - மறவர் என்கிற நீச ஜாதியரையும் போலே
என் மகளை,En Magalai - (ஸத் குலத்திற் பிறந்த) என் பெண் பிள்ளையை
வேண்டிற்று செய்து,Vendritru Seidhu - தன் இஷ்டப்படி செய்து
கூடிய கூட்டமே ஆகக் கொண்டு,Koodiya Koottaame Aaga Kondu - தம்பதிகளாகிய இருவரும் நெஞ்சு பொருந்திக் கூடின கூடுதலையே விவாஹமாஹக் கொண்டு
குடி வாழும் கொல் ஓ,Kudi Vaalum Kol O - குடிவாழ்க்கை வாழ்வனோ?
நாடும்,Naadum - (அன்றி) ஸாமாந்ய ஜனங்களும்
நகரும்,Nagarum - விசேஷஜ்ஞ ஜனங்களும்
அறிய,Ariya - அறியும்படி (பஹிரங்கமாக)
நல்லது ஓர் கண்ணாலம் செய்து,Nalladhu Or Kannaalam Seidhu - விலக்ஷணமானதொரு விவாஹோத்ஸவத்தை (விதிப்படி) செய்து
தக்க ஆ,Thakka Aa - (ஜாதி தர்மத்துக்குத்) தகுதியாக
கைப்பற்றும் கொல் ஓ,Kaippatrum Kol O - பாணி க்ரஹணம் பண்ணுவனோ?