திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 303 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
303பெரியாழ்வார் திருமொழி || (எட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை) (தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்து தாய் பலபடி வருந்திக்கூறும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 7
அண்டத் தமரர் பெருமான் ஆழியான் இன்று என் மகளை பண்டப் பழிப்புகள் சொல்லிப் பரிசற ஆண்டிடுங் கொலோ கொண்டு குடி வாழ்க்கை வாழ்ந்து கோவலப் பட்டம் கவித்து பண்டை மணாட்டிமார் முன்னே பாதுகாவல் வைக்குங் கொலோ–3-8-7
பதவுரை Show / Hide
அண்டத்து அமரர்,Andhathu Amarar - பரம பதத்திலுள்ள நித்ய ஸூரிகளுக்கு
பெருமான்,Perumaan - தலைவனும்
ஆழியான்,Aazhiyaan - திருவாழி யாழ்வானை யுடையனுமான கண்ணபிரான்
என் மகளை,En Magalai - என் பெண் பிள்ளையை
இன்று,Endru - இப்போது
பண்டம் பழிப்புக்கள் சொல்லி,Pandham Pazhippukal Solli - பதார்த்தங்களுக்குக் குறை சொல்வது போல் (இவளது) ரூப குணங்களிற் சில குறைகளைச் சொல்லி
பரிசு அற,Parisu Ara - வரிசை கெடும்படி
ஆண்டிடும் கொல் ஓ,Aandidum Kol O - ஆளுவனோ?(அன்றி,)
பண்டை மணாட்டிமார் முன்னே,Pandai Manaattimaar Munne - முன்பே பட்டங்கட்டித் தனக்குத் தேவியாயிருப்பவர்களின் முன்னே
கொண்டு,Kondu - இவளைக் கொண்டு
குடி வாழ்க்கை வாழ்ந்து,Kudi Vaalvazh Vaalndhu - (தனது) க்ருஹ க்ருத்யமெல்லாம் நடத்தி
கோவலர் பட்டம் கழித்து,Kovalar Pattam Kazhiththu - “இவள் இடைகுலத்துக்குத் தலைவி” என்று (தன் மனைவியானமை தோற்றப்) பட்டங்கட்டி,
பாதுகாவல் வைக்கும் கொல் ஓ,Paadhukaaval Vaikkum Kol O - அந்தப்புறக் காவலிலே வைப்பனோ?