திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 304 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
304பெரியாழ்வார் திருமொழி || (எட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை) (தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்து தாய் பலபடி வருந்திக்கூறும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 8
குடியில் பிறந்தவர் செய்யும் குணமொன்றும் செய்திலன் அந்தோ நடை யொன்றும் செய்திலன் நங்காய் நந்தகோபன் மகன் கண்ணன் இடை யிருபாலும் வணங்க இளைத்திளைத்து என் மகள் ஏங்கி கடை கயிறே பற்றி வாங்கிக் கை தழும்பேறிடுங் கொலோ–3-8-8
பதவுரை Show / Hide
நங்காய்,Nangai - பூரணையாயிருப்பவளே;
நந்தகோபான மகன் கண்ணன்,Nandagopaana Magan Kannan - நந்தகோபருடைய பிள்ளையாகிய கண்ணன்
குடியில் பிறந்தவர் செய்யும் குணம்,Kudiyil Pirandhavar Seyyum Gunam - உயர்ந்த குலத்தில் பிறந்தவர்கள் (குல மர்யாதைக்குத் தக்கபடி) செய்யும் குணங்களில்
ஒன்றும்,Ondrum - ஒருவகைக் குணத்தையும்
செய்திலன்,Seydhilan - செய்தானில்லை;
நடை,Nadai - உலகத்துக்குப் பொதுவான நடத்தைகளிலும்
ஒன்றும் செய்திலன்;,Ondrum Seydhilan - ஒன்றும் செய்திலன்;
அந்தோ!,Andho - அஹஹ!
என் மகள்,En Magal - என் மகளானவள்
இடை,Edai - (தயிர் கடையும் போது) இடுப்பானது
இரு பாலும்,Eru Paalum - இரு பக்கத்திலும்
வணங்க,Vananga - துவண்டு போவதனால்
ஏங்கி,Eangi - மூச்சுப்பிடித்துத் கடைய மாட்டாள்) நடுநடுவே எக்கமுற்று
இளைத்து இளைத்து,Elaiththu EIaiththu - மிகவும் இளைத்து
கடை கயிறே,Kadaikayire - கடைகிற கயிற்றையே
பற்றி வாங்கி,Patri Vaangi - பிடித்து வலித்திழுப்பதனால்
கை தழும்ப ஏறிடும் கொல் ஓ,Kai Thazhumpa Eraidum Kol O - (தனது ஸுகுமாரமான) கைகள் தழும்பேறப் பெறுமோ?.