திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 3052 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3052திருவாய்மொழி || (4-5–வீற்றிருந் தேழுலகும் ) (எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்) (கீழ்ப்பாசுரத்திற் சொன்ன மேன்மைக்கு அடியான பிராட்டி ஸம்பந்தத்தை யுடையவனை ஸகல பாதங்களும் தீரும்படி புகழப் பெற்றனென்கிறார்.) 2
மைய கண்ணாள் மலர்மேல் உறை வாள் உறை மார்பினன் செய்ய கோலத்தடங் கண்ணன் விண்ணோர் பெருமான் தனை மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேன் வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே.–4-5-2
பதவுரை Show / Hide
மைய கண்ணான்,Maiya kannaan - மை யெழுதப்பட்ட கண்ணை யுடையனாய்
மலர்மேல் உறைவாள்,Malarmel uraivaal - தாமரைமலரிலே வஸிப்வபளான லக்ஷ்மி
உறை,Urai - நித்யவாஸம் பண்ணப்பெற்ற
மார்பினன்,Maarbinan - மார்பையுடையனாய்
செய்ய கோலம் தட கண்ணன்,Seiyya kolam thada kannan - சிவந்து அழகையுடைத்தாய் விசாலமான திருக் கண்களையுடையனாய்
விண்ணோர் பெருமான் தன்னை,Vinnor perumaan thannai - நித்யஸூரி நாதனை எம் பெருமானை
மொய்ய சொல்லால்,Moyya sollaal - செறிந்த சொற்களாலே சமைந்ததாய்
இசை,Isai - இசையை யுடைத்தான
மாலைகள்,Maalaigal - மாலைகளாலே
வியல் ஞாலத்து,Viyal gnaalathu - அகன்ற புவியிலேயிருக்கச்செய்தே
வெய்ய நோய்கள் முழுதும்,Veyya noigal muzhudhum - கொடிய க்லேசங்கள் அனைத்தும்
வீய,Veeya - நசிக்கும்படியாக
ஏத்தி,Yethi - துதித்து
உள்ள பெற்றேன்,Ulla petren - என்னெஞ்சாலே அநுபவிக்கப் பெற்றேன்.