| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 306 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (எட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை) (தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்து தாய் பலபடி வருந்திக்கூறும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 10 | மாயவன் பின் வழி சென்று வழியிடை மாற்றங்கள் கேட்டு ஆயர்கள் சேரியிலும் புக்கு அங்குத்தை மாற்றமு மெல்லாம் தாயவள் சொல்லிய சொல்லைத் தண் புதுவைப் பட்டன் சொன்ன தூய தமிழ்ப் பத்தும் வல்லார் தூமணி வண்ணற் காளாரே–3-8-10 | வழி இடை,Valee Idai - போகிற வழியிலே மாற்றங்கள் கேட்டு,Maattrangal Kettu - (அபூர்வ வஸ்துக்களைக் கண்டால் இவை என்?” என்று அவ் விஷயமாக) வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டு மாயவன் பின் வழி சென்று,Maayavan Pin Vali Sendru - கண்ணபிரான் பின்னே போய் ஆயர்கள் சேரியிலும் புக்கு,Aayargal Seriyilum Pukku - திருவாய்ப்பாடியிலும் சென்று புகுந்த பின்பு அங்குத்தை மாற்றமும் எல்லாம்,Anguththai Maatramum Ellaam - அங்குண்டாகும் செயல்கள் சொலவுகள் முதலிய எல்லாவற்றையுங் குறித்து தாய் அவள்,Thaai Aval - தாயானவள் சொல்லிய,Solliya - சொன்ன சொல்லை,Sollai - வார்த்தைகளை தன் புதுவைபட்டன் சொன்ன,Than Pudhuvaipattan Sonnan - குளிர் தன்மையை யுடைய ஸ்ரீவில்லிப்புத்தூரில் அவதரித்த பெரியாழ்வார் அருளிச் செய்தவையாகிய தூய,Thooya - பழிப்பற்ற தமிழ் பத்தும்,Tamil Paththum - தமிழ் பாட்டுக்கள் பத்தையும் வல்லார்,Vallaar - ஓத வல்லவர்கள் தூ மணிவண்ணனுக்கு,Thoo Manivannanukku - அழகிய மணி போன்ற நிறத்தையுடைய கண்ணபிரானுக்கு ஆளர்,Aalar - ஆட்செய்யப் பெறுவர். |