திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 307 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
307பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 1
என்னாதன் தேவிக்கு அன்று இன்பப் பூ ஈயாதாள் தன் நாதன் காணவே தண் பூ மரத்தினை வன்னாதப் புள்ளால் வலியப் பறித்திட்ட என்னாதன் வன்மையைப் பாடிப் பற எம்பிரான் வன்மையைப் பாடிப் பற–3-9-1
பதவுரை Show / Hide
என் நாதன்,En Naathan - எனக்கு ஸ்வாமியான கண்ண பிரானுடைய
தேவிக்கு,Devikku - தேவியான ஸத்ய பாமைப் பிராட்டிக்கு
இன்பம் பூ,Enbam Poo - மனோ ஹரமான கற்பகப் பூவை
அன்று,Andru - (அவன் விரும்பின) அக் காலத்தில்
ஈயாதாள் தன்,Eeyaadhaal Than - கொடாத இந்திராணியினுடைய
நாதன்,Naathan - கணவனான தேவேந்திரன்
காணவே,Kaanave - கண்டு கொண்டு நிற்கும் போதே
தண் பூ மரத்தினை,Than Poo Maraththai - குளிர்ந்த பூக்களை யுடைய கல்ப வ்ருஷத்தை
வல் நாதம் புள்ளால்,Val Naatham Pullaal - வலிமை யுடைய ஸாமவேத ஸ்வரூபியான பெரிய திருவடியாலே
வலிய,Valiya - பலாத்காரமாக
பறித்து,Pariththu - பிடுங்கிக் கொண்டு வந்து
இட்ட,Etta - (அதனை ஸத்யபாமையின் வீட்டு முற்றத்தில்) நட்டருளின
என் நாதன்,En Naathan - என் ஸ்வாமியான கண்ண பிரானுடைய
வன்மையை,Vanmaiyai - வலிவை
பாடி,Paadi - பாடிக் கொண்டு
பற,Para - உந்திப்பற; எம் பிரான் வன்மையை பாடிப் பற