திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 309 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
309பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 3
உருப்பிணி நங்கையைத் தேரேற்றிக் கொண்டு விருப்புற் றங்கேக விரைந்து எதிர் வந்து செருக்குற்றான் வீரம் சிதைய தலையைச் சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப் பற தேவகி சிங்கத்தைப் பாடிப்பற–3-9-3
பதவுரை Show / Hide
உருப்பிணி நங்கையை,Uruppini nangaiyai - ருக்மிணிப் பிராட்டியை
தேரின்,Therin - (தனது) தேரின் மேல்
ஏற்றிக் கொண்டு,Eatrik kondu - ஏற்றிக் கொண்டு
விருப்புற்று,Virupputru - ஆசையுடனே
ஏக,Eka - (கண்ணன்) எழுந்தருளப்புக,
அங்கு,Angu - அவ்வளவில்
விரைந்து,Viraindhu - மிக்க வேகங் கொண்டு
எதிர் வந்து,Ethir vandu - (போர் செய்வதாக) எதிர்தது
செருக்கு உற்றான்,Serukku utraan - கர்வப்பட்ட ருக்மனுடைய
வீரம் சிதைய,Veeram sithaiya - வீரத் தனம் கெடும் படியாக
தலையை,Thalaiyai - (அவனது) தலையை
சிரைத்திட்டான்,Siraiththittaan - (அம்பாலே) சிரைத்து விட்ட கண்ணனுடைய
வன்மையை,Vanmaiyai - வலிவை பாடிப் பற
தேவகி சிங்கத்தை,Devaki singaththai - தேவகியின் வயிற்றிற் பிறந்த ஸிம்ஹ குட்டி போன்றவனை
பாடிப்பற,Paadippara - பாடிக் கொண்டு உந்திப்பற; எம் பிரான் வன்மையை பாடிப் பற