| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 31 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 9 | அதிரும் கடல் நிற வண்ணனை ஆய்ச்சி மதுர முலை யூட்டி வஞ்சித்து வைத்து பதறப் படாமே பழந் தாம்பா லார்த்த உதரம் இருந்தவா காணீரே ஒளி வளை யீர் வந்து காணீரே–1-2-9 | அதிரும்,Athirum - கோஷிக்கின்ற கடல்நிறம்,Kadalniram - கடலினது நிறம்போன்ற வண்ணனை,Vannanai - நிறத்தை யுடைய கண்ணனுக்கு ஆய்ச்சி,Aaychchi - யசோதை யானவள் மதுரம் முலை ஊட்டி,Madhuram mulai ootti - இனிய முலைப் பாலை ஊட்டி, வஞ்சித்து வைத்து,Vanchiththu vaiththu - (மேல், தான் இவனைக் கட்டப் போகிறதை இவனறிய வொண்ணாதபடி) ஏமாத்தி பதறப் படாமே,Patharappadaame - தன் எண்ணம் தப்பாதபடி பழ தாம்பால்,Pazha thaambaal - பழகின கயிற்றாலே ஆர்த்த,Aartha - கட்டி வைத்த உதரம் இருந்த ஆ காணீரே,Utharam irundha aa kaanire - வயிறு இருந்தபடியை காணீர்! ஒளி வளையீர் வந்து காணீரே,Oli valaiyeer vandhu kaanire - ஒளி மிக்க வளையை யுடைய பெண்காள்! வந்து காணீர்!! |