திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3103 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3103திருவாய்மொழி || (4-9-நண்ணாதார் முறுவலிப்ப) (உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) (ஆழ்வாருடைய ஆர்த்திதீரும்படி பரமபதத்திலிருப்பைக காட்டிக் கொடுக்க, அதுகண்டு தாம் களித்தமை கூறுகின்றது இப்பாசுரம்.) 9
கூட்டுதி நின் குரை கழல்கள்; இமையோரும் தொழா வகை செய்து, ஆட்டுதி நீ; அரவணையாய்! அடியேனும் அஃது அறிவன்; வேட்கை எலாம் விடுத்து எனை உன் திருவடியே சுமந்து உழலக் கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே.–4-9-9
பதவுரை Show / Hide
அரவு அணையாய்,Aravu anaiyaay - சேஷசாயியான பெருமானே!,
நீ,Nee - நீ
நின் குரை கழல்கள்,Nin kurai kazhalkal - (அபிமதரான சிலரை) ஆபரணத்வநி பொருந்திய உனது திருவடிகளிலே
கூட்டுதி,Kootuthi - சேர்த்துக் கொள்ளுகிறாய்;
இமையோரும்,Imayorum - (திருவுள்ள மில்லையாகில்) (ஞானசக்திகள் நிறைந்திருக்கப் பெற்ற) தேவர்களும்
தொழா வகை செய்து,Thoza vakai seydhu - கண்டு அநுபவியாதபடி பண்ணி
ஆட்டுதி,Aattuthi - அலைக்கின்றாய்;
அஃது,Ahdhu - இப்படி எளியனாயும் அரியனாயுமிருக்குந் தன்மையை
அடியேனும்,Adiyenum - நானும்
அறிவன்,Arivan - அறிந்தேயிருக்கின்றேன்;
என்னை,Ennai - எனக்குண்டான
வேட்கை எல்லாம் விடுத்து,Vedkai ellaam viduthu - விஷயாந்தர விருப்பங்களெல்லாவற்றையும் கழித்து
உன் திரு அடியே,Un thiru ade - உனது திருவடிகளையே
சுமந்து உழல,Sumanthu uzhal - நான் தலையால் சுமந்து திரியும்படி
கூட்ட அரிய திரு அடிக்கண்,Kootu ariya thiru adikkan - துர்லபமான திருவடிகளிலே
கூட்டினை,Koottinai - சேர்த்துக் கொண்டாய்;
நான் கண்டேன்,Naan kandeen - இதை ப்ரத்யக்ஷமாக அநுபவித்தேன்